உமா பாரதியுடன் கி.வீரமணி சந்திப்பு
சென்னை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவைவரவேற்று கருத்து தெரிவித்து வரும் பாரதீய ஜன் சக்தி தலைவர் உமாபாரதிக்குதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த உமா பாரதியை தி.க. தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசினார்.அப்போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற தமிழக அரசின்உத்தரவுக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்ததற்காக உமா பாரதிக்கு வீரமணி நன்றிதெரிவித்துக் கொண்டார்.மேலும், பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற உமா பாரதி தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்றும் வீரமணி கோரிக்கை விடுத்தார்.
பின்னர் உமா பாரதிக்கு பொன்னாடை அணிவித்து பெரியார் குறித்த சிலநூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார். இந்த சந்திப்பின்போது தி.க. பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றனும் உடன் இருந்தார்.
மதங்களையும் சீர்திருத்த வேண்டும்: உமா
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி,
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதுபாராட்டுக்குரியது. இதில் பெண்களையும் தமிழக அரசு அர்ச்சகர்களாக்க முயற்சிக்கவேண்டும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழம்பெரும் இந்து மதத்தில் இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகள்அவசியமானதுதான்.
இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் இந்து மதத்தில் மட்டும் ஏன் இந்தநடவடிக்கைகள்? மற்ற மதங்களிலும் பிற்போக்கான கருத்துக்கள், சம்பிரதாயங்கள்,பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள் உள்ளன.
அவற்றையும் களைய நாம் முயற்சிக்க வேண்டும். இந்துக்களை மட்டும் சீர்திருத்தமுயற்சித்தால் அது பாரபட்சமான நடவடிக்கையாகவே இருக்கும்.
இஸ்லாமியப் பெண்களுக்கு இன்றும் கூட ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கஅரசுகள் முன்வர வேண்டும்.
இது பெண்களுக்கு எதிரானது, சட்டத்திற்கு விரோதமானது.
தமிழக அரசு பர்தா முறையை நீக்கி சட்டம் கொண்டு வந்து இந்தியாவுக்கேமுன்னுதாரணமாக திகழ வேண்டும்.
இதேபோல மற்ற மதங்களிலும் உள்ள பழமையான பழக்க வழக்கங்களை களையதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உமாபாரதி.
ராமேஸ்வரம்முதல் கேதார்நாத் வரை யாத்திரை மேற்கொண்டுள்ள உமா பாரதி தனதுபயணத்தின் ஒரு கட்டமாக சென்னைக்கு வந்தார்.
இரும்பு கரம்: வீரமணி கோரிக்கை
இதற்கிடையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடம் கிடைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமருக்கு தமிழகமுதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.
டெல்லி மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்னேறிய சாதியை சேர்ந்த டாக்டர்கள் பொறுப்பும், மனிதாபிமானமும் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிப்பதை புறக்கணித்து வருவதால் மத்திய சுகாதாரத் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது சரியானது.
பிரதமர் வேண்டுகோளுக்கு கூட செவி சாய்க்காமல் கிளர்ச்சி செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைகாட்ட வேண்டும் என்று வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications