வைகோவை கை கழுவியது காங்கிரஸ்:கூட்டணியில் இருக்கிறோம் என்கிறது மதிமுக
டெல்லி:
மதிமுகவை ஒரு வழியாக கை கழுவி விட்டது மத்திய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி.
மத்தியில் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஐக்கியமுற்போக்குக் கூட்டணியின் சிறப்புக் கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடந்தது.இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வைகோவுக்கு அழைப்பு அனுப்பப்படுமாஎன்பதில் சர்ச்சை நிலவி வந்தது. இறுதியில் திமுகவின் நெருக்கடிகளுக்குப் பணிந்தகாங்கிரஸ் மேலிடம், வைகோவை அழைப்பதில்லை என்று முடிவு செய்தது.அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந் நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் வைகோவைத் தவிர மற்ற அனைத்துக்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன் மூலம் வைகோவையும், மதிமுகவையும் காங்கிரஸ் மேலிடம் கை கழுவிவிட்டது உறுதியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்புமலரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார்.
திமுக சார்பில் தயாநிதி மாறன், பாமக சார்பில் புதுவை பாமக எம்.பி. ராமதாஸ்உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், தாங்கள் கூட்டணியிலேயே நீடிப்பதாக மதிமுக அறிவித்துள்ளது. அக் கட்சியின் எம்பியானகிருஷ்ணசாமி கூறுகையில்,
வைகோவுக்கு அழைப்பு அனுப்பப்படாததை நாங்கள் அவமானமாகக் கருதவில்லை. அழைப்பு இல்லாததால்கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டதாக அர்த்தமில்லை.












Click it and Unblock the Notifications