பல்கலை.யில் செல்போன் தடை தப்பில்லை-பொன்முடிக்கு ராமதாஸ் பதிலடி
திண்டிவனம்:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன்களைப்பயன்படுத்த தடை விதித்திருப்பதில் தவறே கிடையாது.
இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ள கருத்துக்களை ஏற்க முடியாதுஎன்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் தனது வீட்டில் ராமதாஸ்செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது,
கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என நிாங்கள் கடந்தஆட்சியின்போது தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் இந்த ஆட்சி வந்தபிறகுதான் கண்ணகி சிலைக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
தற்போதைய அரசு சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பது,தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீண்டும் பறை சாற்றுகின்றஅக்கறையின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கை.
தனியார் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்றுநாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உச்சநீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராகஅளித்த தீர்ப்பு, சமூக நீதிக்கு எதிரானது என்று முதன் முதலில் நிாங்கள்தான் குரல்கொடுத்தோம்.
இதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு,அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாகஆக்கியது.
இதைத் தொடர்ந்து அந்தந்த மாநிலங்கள் இதுதொடர்பாக சட்டத்தைக் கொண்டுவரலாம் என மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கும் கூறினார். இதன் எதிரொலியாககர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் தனியாக சட்டம்கொண்டு வந்தன. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்படவில்லை.
இப்போது அமைந்துள்ள புதிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துநிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம்,பழங்குடியினருக்கு 1 சதவீதமும் சுய நிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் செல்போன் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதுவரவேற்புக்குரிய ஒன்று. முதல் வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, முதுநிலைஆராய்ச்சி மாணவர்களாக இருந்தாலும் சரி, அவரவர் நிலைக்கு ஏற்ப ஒழுக்கநெறிகளும், கட்டுப்பாடுகளும் தேவை.
சுதந்திரம் என்ற பெயரில் ஒழுக்க நெறிகளை பறி கொடுக்கக் கூடாது. ஆசிரியர்வகுப்பில் பாடம் நடத்தும்போது மாணவன், செல்போனில் பேசினால்ஆசிரியர்களுக்கு என்ன மரியாதை?
மது, திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்போன்கள் போன்றவை,மாணவர்களை பொறுப்பற்ற இளைஞர்களாக உருவாக்க தூண்டுகோலாக இருக்கிறது.இவை கூடாது என சொல்லவில்லை. ஆனால் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவேண்டும் என சொல்கிறோம்.
அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் செல்போன்களைப்பயன்படுத்த தடை விதித்தபோது அதை வரவேற்றோம்.
மாணவர்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது, அப்படிவிதித்தால் அவர்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என புதிதாக பொறுப்பேற்றுள்ளஉயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
அவர் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. ஏடுகளில்வெளியாகியுள்ளதைப் போல பேசியிருந்தால் அதை ஏற்க முடியாது.
மாணவர்களுக்கு கட்டுப்பாடு கூடாது என்று அவர் கூறியதை மாணவர்களும்,அவர்களது பெற்றோர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கட்டுப்பாட்டோடுவளர்க்க வேண்டும், கற்க வேண்டும் என்பதுதான் கருத்தாக இருக்க வேண்டும்என்றார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications