2 ரூபாய் அரிசியை தொடருவது கஷ்டம்: வெங்கையா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வழங்குவது மிகக்கடினமானது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2 ரூபாய்க்கு 1 கிலோஅரிசித் திட்டம் இயலாத காரியமல்ல முடிகிற விஷயம்தான். இருந்தாலும் மிகவும்கடினமாகும்.கருணாநிதி அரிசி விலையை குறைக்கிறார், ஆனால் மறுபக்கம் ரேஷன் அரிசிக்கானமானியத்தை மத்திய அரசு குறைக்கிறது.
2 ரூபாய்க்கு கிலோ அரிசியை கொஞ்ச காலத்திற்குக் கொடுக்கலாம்.
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து இதை வழங்க முடியுமா என்று கேட்டால்அது மிகவும் சிரமமான விஷயம். பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி,கோதுமையின் மானியத்தை மத்திய அரசு மேலும் குறைக்கவுள்ளது.
அப்படி நடந்தால் இந்த்த திட்டத்தை நிறைவேற்றுவது மிக மிக கடினம் என்றார்வெங்கையா.












Click it and Unblock the Notifications