திருச்சி கோவிலில் கருணாநிதி படம் அகற்றம்!
திருச்சி:
திருச்சி அருகே சமயபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வைக்கப்பட்டிருந்தமுதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தை போலீஸார் அகற்றினர்.
சமயபுரத்தில் தேவாரம் நாராயண பட்டர் என்பவர் தான் அமைத்த கிருஷ்ணர்கோவிலில், கிருஷ்ணர் சிலைக்கு மேலே கருணாநிதியின் புகைப்படத்தை மாட்டிஅதற்கும் வழிபாடுகள் செய்து வந்தார்.இதுகுறித்து பட்டரிடம் கேட்டபோது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம்என்ற மிகச் சிறந்த முடிவை அமல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவரை கடவுளுக்கு சமமாக வைத்து இந்த பூஜையை செய்து வருவதாகதெரிவித்திருந்தார்
இக்கோவிலுக்கு கலைஞர் கற்கோவில் என்றும் பட்டர் பெயர் சூட்டியிருந்தார்.கருணாநிதி புகைப்படத்திற்கு நடந்து வந்த இந்த வழிபாடு அப்பகுதியில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியது.
இந் நிலையில் உடனடியாக தனது படத்தை கோவிலிலிருந்து அகற்றுமாறுகாவல்துறைக்கு உத்தரவிட்டார் கருணாநிதி.
இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சர்ச்சைக்குரிய கிருஷ்ணர் கோவிலுக்குச்சென்று கருணாநிதியின் படத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீஸார் இந்தநடவடிக்கையை எடுத்தபோது பட்டர் கோவிலில் இல்லை. வீட்டில் இருந்தார்.
இது குறித்து பட்டரிடம் கேட்டபோது, எனது புகழைப் பொறுக்க முடியாத சிலர் செய்தசதிதான் கலைஞர் படம் அகற்றப்பட்டதற்குக் காரணம். விரைவில் மீண்டும் கலைஞர்கற்கோவிலில் பூஜைகளைத் தொடங்குவேன். ஆனால் எப்போது என்று சொல்லமுடியாது என்றார்.
சும்மா இருக்க மாட்டார் போலிருக்கே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications