கருணாநிதி மீதான மேலும் 2 வழக்குகள் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதி மீது தொடரப்பட்ட மேலும் 2அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை 20 மணி நேரம் நான் விழித்திருந்துஉழைக்கிறேன் என்று கூறியிருந்தார். அதை விமர்சித்து முரசொலியில் கருணாநிதிஎழுதிய கட்டுரையில், தூங்காத் திருடன் என்ற தலைப்பில் ஜெயலலிதாவைவிமர்சித்திருந்தார்.

இதையடுத்து அவர் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம்சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த திமுக கூட்டத்தில் அதிமுக ஆட்சி குறித்துபேசியிருந்தார் கருணாநிதி.

அதுதொடர்பாக இன்னொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் தலைவர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளைவாபஸ் பெற தற்போதைய திமுக அரசு முடிவெடுத்தது.

அதன்படி கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கருணாநிதி மீதான இந்த இருவழக்குகளையும் வாபஸ் பெறுவதாகக செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை ஏற்ற நீதிபதி 2 அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+