பிரபாகரனுடன் பேசுவேன்: ராஜபக்ஷே

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பேச ஆர்வமாக உள்ளேன்.அது முடியும் என நம்புகிறேன் என இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேகூறியுள்ளார்.

என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

நாம் அனைவரும் மனிதர்கள். தமிழர்களும், சிங்களர்களும் இலங்கை குடிமக்கள்.அது பிரபாகரனாக இருந்தாலும் சரி, ராஜபக்ஷேவாக இருந்தாலும் சரி, அனைவரும்இலங்கையின் குடிமக்கள்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரபாகரனுடன் பேச ஆர்வமாக உள்ளேன்.அது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. என்னால் பிரபாகரனுடன் நேருக்கு நேர் பேசமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையின் குடிமக்கள் என்ற முறையில் இருவரும் நேருக்கு நேர் முகம் பார்த்துஅமர்ந்து பேசலாம், பேச முடியும். எனவே விடுதலைப் புலிகளுக்கு நான் விடுக்கும்செய்தி, பேசலாம், வாருங்கள். பேசினால்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்என்பது எனது நம்பிக்கை.

என்ன மாதிரியான ஆட்சி முறை வேண்டும், அரசு நிர்வாகத்தை எப்படி நடத்தலாம்என்பது உள்பட அனைத்து விஷயங்களையும் விவாதித்து முடிவு செய்யலாம். இதைச்செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அவர்களிடம் கூறி விட்டு பேச்சுக்குவருமாறு நான் கூற விரும்பவில்லை. எல்லாவற்றையும் விரிவாக, பகிரங்கமாக,மனம் விட்டுப் பேசலாம் என்றுதான் கூறுகிறேன்.

அவர்களுக்கு கட்டாயத்தைக் கொடுத்து பேச வருமாறு நான் அழைக்கவில்லை. திறந்தமனதுடன் வந்து பேச விடுதலைப் புலிகள் முன் வர வேண்டும். இலங்கையில்அமைதி நிலவுதற்கான யோசனைகளை எடுத்துரைக்க நிபுணர் குழுவைஅமைத்துள்ளோம்.

அந்தக் குழுவில் சிங்களர்களும் உள்ளனர், தமிழர்களும் உள்ளனர், முஸ்லீம்களும்உள்ளனர். பல்துறை அறிஞர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர்இதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்டன் பாலசிங்கம் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் இடம்பெற்றுள்ளவிவரங்கள் குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அவர்கள் விரக்தியில்இருக்கிறார்களா, இல்லையா என்பதை இப்போது அனுமானிக்க முடியாது. ராஜீவ்கொலைக்காக வருத்தம் தெரிவித்து பாலசிங்கம் கூறியிருப்பதை வைத்துப்பார்க்கும்போது அவர்கள் விரக்தி அடைந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

அதே சமயம் பேட்டியின் சாராம்சத்தை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாதுஎன்பது எனது எண்ணம்.

கருணா குழுவினர் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட இலங்கைஅரசு அனுமதிக்காது. இந்த விஷயத்தில் விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டும்,பயமும் தேவையில்லாதது என்றார் ராஜபக்ஷே.

ராஜபக்ஷேவை சந்தித்த ஷியாம் சரண்:

இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஷியாம் சரண் நேற்று கொழும்பு சென்று இலங்கை அதிபர்ராஜபக்ஷேவுடன் இனப் பிரச்சனை குறித்து விவாதித்தார்.

இலங்கையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், இலங்கைவிஷயத்தில் இதுவரை அமைதி காத்து வந்த இந்தியா இப்போது தமிழக கட்சிகளின்நெருக்குதல் காரணமாக இதில் தலையிட ஆரம்பித்துள்ளது.

இலங்கை விவகாரம் குறித்துப் பேசுவதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர்மங்கள சமரவீரா டெல்லி வந்திருந்தார். பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறைஅமைச்சர், செயலாளர் ஆகியோருடன் அவர் பேசினார்.

இந் நிலையில் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் நேற்று கொழும்பு சென்றார்.அங்கு அதிபர் ராஜபக்ஷே, சமரவீரா உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவும் உடனிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை இரு தரப்பினரும் வெளியிடவில்லை.

இருப்பினும், தற்போதைய நெருக்கடியைக் தணிக்கவும், அமைதிப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கும் இந்தியாவின் யோசனைகளைராஜபக்ஷேவிடம் சரண் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

Shyam with Rajapaksha
ராஜபக்ஷேவுடன் ஷியாம் சரண்

இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை:

இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேசஇந்தியாவிலிருந்து எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று இலங்கையைச்சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அனந்தசங்கரி கோரிக்கைவிடுத்துள்ளார்.

முன்னாள் எம்.பியான அனந்தசங்கரி சென்னையில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

இலங்கையில் 50 ஆண்டுகளாக இனப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுள்ளது.அவ்வப்போது ஏதாவது தீர்வு ஏற்படுவது போலத் தோன்றினாலும் எதுவுமேநிரந்தரமாக அமைதியைக் கொண்டு வரவில்லை.

தற்போது விரைவில் தீர்வு கிடைக்கும் சூழ்நிலை நெருங்கி வருகிறது. இப்போதுஇந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டியது அவசியம். இதற்காக இந்தியஎம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைநடத்த வேண்டும்.

எம்.பிக்கள் குழுவை தமிழர் பகுதிகளுக்கும், சிங்களர் வாழும் பகுதிகளுக்கும்அனுப்பி உண்மை நிலையைக் கண்டறிய ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில்தமிழகத்திற்கு மத்திய அரசு என்னெனன் அதிகாரங்களை வழங்கியுள்ளதோ,அதேபோல தமிழர்கள் வாழும் பகுதிக்கு இலங்கை அரசு அதிகாரங்கள் வழங்கவேண்டும். இதை இந்தியா தான் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றார் அனந்தசங்கரி.

ஐந்து நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் அனந்தசங்கரி இந்து பத்திரிக்கைஆசிரியர் ராம், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், துக்ளக் ஆசிரியர் சோஆகியோரை சந்தித்துப் பேசினார்.

முதல்வர் கருணாநிதியையும் அவர் சந்திக்க முயன்று வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+