கற்பழித்துக் கொல்லப்பட்டார் ஆசிரியை மீனாட்சி2 பேர் கைது- நகைகள், மொபெட் மீட்பு!

Subscribe to Oneindia Tamil

குளித்தலை:

குளித்தலை ஆசிரியை மீனாட்சி வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த 2004ம் ஆண்டுஅக்டோபர் மாதம் காணாமல் போனார்.

இந்த வழக்கு தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது. இந்த வழக்குதொடர்பாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன்கருணாகரன் உள்ளிட்ட பலரையும் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில்எந்தவிதத் துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் புதியவேகம் பிறந்தது.

புதிய கோணத்தில் விசாரித்து வந்த போலீஸாருக்கு பணிக்கம்பட்டி அருகே உள்ளஒரு வாழைத் தோப்பில் கிடைத்த எலும்புக் கூடு பெரும் உதவியாக இருந்தது.

Meenakshi with her Husband
அந்த எலும்புக் கூட்டின் மீது இருந்த துணி, மெட்டி, கொலுசு போன்றவைமீனாட்சிக்கு சொந்தமானதுதான் என்று அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள்அடையாளம் காட்டினர்.

இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். டி.எஸ்.பி. பவானீஸ்வரிதலைமையிலான போலீஸ் படை பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியது. இந்தவிசாரணையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

ஆசிரியை மீனாட்சியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்ததாகசண்முகவேல், குமார் என்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குளித்தலைபாரதி நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். மருதூர் ஆதிதிராவிடர் நகரைச் சேர்ந்தவர்குமார்.

சண்முகவேல் குளித்தலையில் இருந்து வருகிறார். இருப்பினும் அவரது மாமனார் வீடுஆசிரியை மீனாட்சியின் வீட்டுக்கு அருகே உள்ளது. இதனால் அடிக்கடி அவர்மாமனார் வீட்டுக்கு வருவது வழக்கம்.

அப்படி வரும்போதெல்லாம் ஆசிரியை மீனாட்சியைப் பார்க்க நேரிட்டுள்ளது. அதிகஅளவில் அவர் நகை அணிந்தபடி பள்ளிக்குச் செல்வதையும், வெளியில்செல்வதையும் பார்த்த அவர் அவற்றை திருட முடிவு செய்தார்.

Kumar and Shanmugavelu
இதையடுத்து தனது நண்பரான குமாருடன் சேர்ந்து திட்டம் தீட்டி மீனாட்சியைவழிமறித்து, வாழைத் தோப்புக்குள் கொண்டு போய், கற்பழித்து, கொலை செய்துபுதைத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசிடம் சண்முகவேலு கொடுத்த வாக்குமூலத்தில்,

நானும் குமாரும் நீண்ட வருடங்களாக நண்பர்கள். கட்டிட வேலைக்கு செல்வது, சாராயம் விற்பது போன்றதொழில்களில் ஈடுபட்டு வந்தோம். தினமும் எங்களால் குடிக்காமல் இருக்க முடியாது.

எங்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. எனவே பணத்துக்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுஇருந்தோம். எனது மாமியார் வீட்டுக்கு அருகில்தான் ஆசிரியை மீனாட்சி வீடு உள்ளது.

அவர் தினமும் அதிக நகைகள் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு செல்வார். இதையடுத்துமீனாட்சியின் நகைகளை கொள்ளையடிப்பது என்று திட்டம் போட்டோம்.

எங்கு இந்த திட்டத்தை நிறைவேற்றுவது என்று யோசித்தோம். மீனாட்சி பள்ளிக்கு சென்றுவிட்டு தினமும் மாலை5 மணிக்கு ராஜேந்திரன் வாழைத்தோப்பு வழியாக வீட்டுக்கு போவார். மாலை நேரத்தில் அந்த இடத்தில் ஆள்நடமாட்டம் இருக்காது.

எனவே எங்களது திட்டத்தை நிறைவேற்ற அந்த இடம்தான் சரி என்று முடிவு செய்தோம். இதனால் 2004ம்ஆண்டு ஆக்டோபர் 19ம் தேதி ராஜேந்திரன் வாழைத் தோப்பில் நான் தென்னம் மட்டை ஒலையை சீவுவதுபோல் ரோட்டில் நின்று கொண்டிருந்தேன்.

எனது நண்பர் குமார், மீனாட்சி வருகிறாரா என்று பார்ப்பதற்காக சற்று தொலைவில் நின்று இருந்தான். அப்போதுஅந்த பக்கம் மீனாட்சி மோட்டர் சைக்கிளில் வரும் சத்தம் கேட்டது. உடனே குமார் எனக்கு சிக்னல் கொடுத்தான்.

மீனாட்சியின் மோட்டார் சைக்கிள் என் அருகில் வந்த உடனே நான் சீவிக் கொண்டிருந்த தென்னை மட்டையைதவறுவது போல மோட்டார் சைக்கிள் மீது போட்டேன் அதில் மீனாட்சி நிலை தடுமாறி சகதியில் விழந்தார்.

உடனே நாங்கள் மீனாட்சியின் வாயில் சேலையை திணித்து அவரை தரதரவென்று தோப்புக்குள் இழுத்துச்சென்றோம். வாழைத் தோப்புக்குள் சென்றதும் மீனாட்சி அணிந்திருந்த நகைகள், வளையல், கம்மல்ஆகியவற்றை கழற்றினோம்.

இதனால் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். கழத்தை பிடித்து நெரித்தோம். அவரால் அதன்பிறகு எதிர்க்கமுடியவில்லை. நகைகள் அனைத்தையும் கழற்றிய பிறகு புறப்படலாம் என்று நினைத்த போது மீனாட்சியின்அழகை பார்த்த குமாருக்கு அவரை அனுபவிக்க ஆசை வந்துவிட்டது.

பின்பு வாழைத்தோப்பில் மீனாட்சியை குமார் கற்பழித்தான். அவர் கதறினார். ஆனாலும் மாறி மாறிகற்பழித்ததில், அவர் மயக்கம் அடைந்தார். அதற்கு பிறகும் மீனாட்சியை அப்படியை விட்டுச் சென்றால் நாங்கள்மாட்டிக் கொள்வோம் என்பதால் கொன்றுவிட முடிவு செய்தோம்.

தென்னை மர ஒலை சீவ வைத்திருந்த கத்தியை எடுத்து மீனாட்சியின் கழுத்தை நான் அறுத்து கொன்றேன். பின்புஅங்கேயை ஒரு குழி தோண்டி மீனாட்சி உடலை புதைத்தோம். வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காகபுதைத்த இடத்தில் புல், இலைகளை போட்டு வைத்தோம்.

மோட்டர் சைக்கிளை எடுத்து வந்து தோட்டத்தில் இருந்த 7 அடி குழியில் போட்டு விட்டோம். அந்த குழியில்தண்ணீர் இருந்ததால் வெளியில் தெரியவில்லை. அதில் மண்ணையும் போட்டு மூடினோம். சில நகைகளைகடைகளில் விற்று மது குடித்தோம்.

சிறிது நகைகளை உருக்கி வேறு நகை செய்து எங்கள் மனைவிக்கு கொடுத்தோம். மீனாட்சி வழக்கில் போலீஸ்எங்களை சந்தேகப்படவில்லை. மற்றவர்கள் மீதே சந்தேகம் வந்ததால் நாங்கள் நிம்மதியாக ஊருக்குள்ளேயேசுற்றி திரிந்தோம்.

இந்த நிலையில் மீனாட்சியின் உடல் கண்டு பிடிக்கப் படவும் எங்களுக்கு பயம் ஏற்பட்டது. இதனால் போலீசாரின்நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்தோம். எங்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் எங்களை கைதுசெய்து விட்டனர்.

என வாக்குமூலம் கொடுத்தான். இதேபோல குமாரும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

கைது செய்யப்பட்ட குமார் மற்றும் சண்முகவேல் ஆகிய இருவரையும் போலீஸார்எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று எப்படி குற்றத்தைசெய்தார்கள் என்பதை நடித்துக் காட்டக் கூறினர்.

அதன்படி இருவரும் நடித்துக் காட்டினர். குமாரின் தந்தை மருதூர் டவுன் பஞ்சாயத்தின்6வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஆவார்.

இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின்டி திருடப்பட்ட நகைகள் மற்றும்புதைக்கப்பட்ட மொபெட் ஆகியவற்றை போலீஸார் மீட்டுள்ளனர். இன்றுஇருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+