பாதக் கமிஷன் லீக்-பிரதமர் மீது உரிமை மீறல்நட்வருக்கு ஜெ-நாயுடு-முலாயம்-பாஜக ஆதரவு
டெல்லி:
இராக்கின் எண்ணெய் உணவு திட்ட முறைகேட்டில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்குக்குதொடர்புள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாதக் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்குமுன்பே லீக் ஆனது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீது மாநிலங்களவையில் உரிமை மீறல் கொண்டுவந்துள்ளார் நட்வர் சிங். அவருக்கு அதிமுக, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆதரவுதெரிவித்துள்ளன.
மேலும் பிரதமர் மீது பாஜகவும் மக்களைவையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்துள்ளது.எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்ப இடதுசாரிக் கட்சிகளும்முடிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மக்களைவையிலும் மாநிலங்களவையிலும் பாதக் கமிஷன் லீக் ஆன விவகாரத்தில் பிரதமர் மன்னிப்புகோர வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று கோரி பாஜக தலைமையில் எதிர்க் கட்சிகள் பெரும்அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பின்னர் மீண்டும் அவை கூடியபோது பெரும் அமளிக்கு இடையே பாதக் கமிஷன் அறிக்கையை நிதியமைச்சர்ப.சிதம்பரம் மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நட்வர் சிங், அவரது மகன் ஜகத் சிங்ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்கள் நேரடியாக பண லாபம் ஏதும்அடையவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவுத் தலைவர் என்ற பதவியை நட்வர் தவறாகபயன்படுத்தியதாகவும் பாதக் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில் இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பில்லை என்றும் பாதக் கமிஷன் கூறியுள்ளது.
ஜகத் சிங்கின் நண்பர்களான அந்தலீப் செகல், ஆதித்யா கண்ணா ஆகிய இருவர் இதன் மூலம் பண லாபம்அடைந்துள்ளதாகவும், அந்தப் பணம் ஜகத்துக்கு வேறு வழியில் வந்து சேர்ந்திருக்கலாம் என்றும் கமிஷன்கூறியுள்ளது. இந்த கமிஷனின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக சிதம்பரம் மக்களவையில்தெரிவித்தார்.
ஆனால், நட்வரை பலிகடா ஆக்கிவிட்டு காங்கிரஸ் தப்ப முயல்வதாக பாஜக தலைவர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் நடக்கும்போது, பிரதமரிடம் சமர்பிக்கப்பட்ட ஒரு அறிக்கை, அங்கு தான் தாக்கல்செய்யப்பட்டிருக்க வேண்டும். அது எப்படி நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் முன்பே லீக் ஆனது என்று கேள்விஎழுப்பியுள்ள நட்வர் சிங் இந்த அறிக்கை லீக்கில் பிரதமருக்கு முழுத் தொடர்புள்ளதாகக் கூறி அவர் மீதுமாநிலங்களவையில் உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்துள்ளார் (நட்வரும் பிரதமரும் மாநிலங்களவைஎம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
இந்தத் தீர்மானத்தை முன் மொழிய 25 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந் நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது சமாஜ்வாடி கட்சி. சமாஜ்வாடி தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமானமுலாயம் சிங், தனது வலது கரமான அமர் சிங்கை அனுப்பி நட்வர் சிங்கை சந்திக்க வைத்தார்.
மேலும் அவரை சமாஜ்வாடிக் கட்சியில் சேரவும் அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரசுக்கு பாடம் புகட்ட நட்வர்சிங்கை பயன்படுத்த நினைக்கும் முலாயம், இதற்காக ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுவின் ஆதரவையும்கோரியுள்ளார். இதையடுத்து பிரதமர் மீதான உரிமை மீறல் பிரச்சனைக்கு அதிமுகவும் தெலுங்கு தேசமும்ஆதரவு தெரிவித்துள்ளன. இன்தக் கட்சிகளுக்கு மக்களவையில் 33 எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த எதிர்க் கட்சிகளுடன் இணைந்து நட்வருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பர்தன் தெரிவித்துள்ளார். இதற்காக நட்வரையும் அவர்சந்தித்துப் பேசினார்.
இராக் எண்ணெய் ஊழல் விவகாரம் ஒரு பெரிய விஷயமே அல்ல, அமெரிக்கா திட்டமிட்டு கிளப்பிய விவகாரம்இது, இதில் நட்வருக்கு நேரடியாகத் தொடர்பும் இல்லை, மேலும் அந்த ஊழல் நடந்தபோது நட்வர் எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லை, அமைச்சராகவும் இல்லை. எனவே இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என காங்கிரசுக்குஇடதுசாரிகள் அறிவுறுத்தி வந்தனர்.
ஆனால், அவர்களை மீறி பாதக் கமிஷனை காங்கிரஸ் நியமித்தது.
இப்போது பாதக் கமிஷன் நட்வரை மாட்டிவிட்டுவிட்டு காங்கிரஸை மட்டும் காப்பாற்றும் வகையில்அமைந்துள்ளதால், காங்கிரசுக்கு தொல்லை தர இடதுசாரிகளும் முடிவு செய்துள்ளது.
இதில் நட்வர் மீது அதிமுகவுக்கு தனிப்பட்ட முறையில் நட்போ, மரியாதையோ இல்லாத நிலையில் காங்கிரசுக்குசிக்கல் தர நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் அமர் சிங்-முலாயம், நாயுடுவுடன் கைகோர்த்து களத்தில்குதித்துள்ளார் ஜெயலலிதா.
இதற்கிடையே பிரதமர் மீதே உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்த நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு மிகவிரைவில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications