நழுவும் கருணாநிதி-பழ. நெடுமாறன் தாக்கு
சேலம்:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது கடமையிலிருந்து தமிழக முதல்வர்கருணாநிதி நழுவி வருகிறார் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழர் பேரமைப்பின் மாநாடு சமீபத்தில்சேலத்தில் நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட நெடுமாறன் பின்னர் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர்கூறுகையில், இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைஎதுவோ, அதையே தமிழக அரசும் கடைப்பிடிக்கும் என்று முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
நீண்ட நெடுங்காலமாக நிலவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டியஅவசியத்தை மத்திய அரசிடம் எடுத்துரைத்து, இலங்கை தொடர்பான இந்தியாவின்கொள்கையை மாற்றிக் கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டியது தமிழகஅரசின் கடமையாகும்.
ஆனால் அந்தக் கடமையிலிருந்து நழுவி வருகிறார் முதல்வர் கருணாநிதி.சென்னை வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை கருணாநிதிசந்தித்திருக்கக் கூடாது. மிக முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து, நாட்டின் மிக மூத்ததலைவருடன் விவாதிக்க ஒரு சாதாரண அதிகாரியை மத்திய அரசு அனுப்பிகருணாநிதியை அவமானப் படுத்தியுள்ளது.
ஈழப் பிரச்சினையில், இந்தியா ஆரம்பம் முதலே தவறான கொள்கையைத்தான்எடுத்துள்ளது. இப்பிரச்சினைக்ைகு உரிய முக்கியத்துவத்தை இந்தியாஅளிக்கவில்லை.
தற்போது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்ல்பபட்டு வருகிறார்கள்.இதுகுறித்து உலக நாடுகள் கவலை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாஇப்பிரச்சினை குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை பிரதமர்மன்மோகன்சிங்தலைமையிலான மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான காலம் கனியும்என திடமாக நம்புகிறேன் என்று கூறினார் நெடுமாறன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications