தந்திரி வழக்கு: அப்ரூவர் ஆகிறார் அழகி சாந்தா
கொச்சி:
சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவை சிக்க வைக்க, விபச்சாரக்கும்பலின் தலைவி ஷோபா போட்ட சதித் திட்டத்திற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டஅழகி சாந்தாவை அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்பு முயற்சித்து வருவதாகக்கூறப்படுகிறது.
கண்டரரு மோகனருவை விபச்சார அழகி சாந்தாவுடன் ஆபாச கோலத்தில் இருப்பதுபோல படம் எடுத்து அவரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஷோபா அவரதுகூட்டாளிகள் அனில், விஜில் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்த சதித் திட்டத்திற்கு மூளையாக இருந்தவர் என்று கூறப்படும் நடிகர் பெச்சுரஹ்மான் தலைமறைவாகி விட்டார். மேலும் கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 6பேரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களைக்கைது செய்ய போலீஸார் தீவிரநடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் விபச்சார அழகி சாந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல்இருந்து வருகிறது. அவர் போலீஸ் பிடியில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.தற்போதுஅவரை ஷோபவுக்கு எதிராக திருப்பி அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்புமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷோபா கடந்த 8ம தேதி எர்ணாகுளம நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல்செய்தார். அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஆனால் இந்தஜாமீனுக்கு அடுத்த நாளே போலீஸார் தடை உத்தரவு பெற்றனர். இதனால்ஷோபாவால் வெளியே வர முடியாமல் போனது.
ஷோபா ஜாமீனில வெளியே வரக்கூடாது என்பதில் சில காவல்துறை அதிகாரிகள்மும்முரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், கைது செய்யப்பட்ட பின்னர்ஷோபா மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என்னுடன் தொடர்புவைத்திருந்த அத்தனை பேரின் முகமூடியையும் நான் ஜாமீனில வெளியே வந்துகிழிப்பேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
ஷோபா வெளியே வந்தால் பல அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள்,முக்கியப் பிரமுகர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் ஷோபாவைவெளியே வர விடாமல் போலீஸ் தரப்பில ஜாமீனுக்கு தடை உத்தரவுபெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்படுவற்கு முன்பு வரை ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் நட்புகாரணமாகத் தான் விபச்சார விடுதியை மிக ஓபனாக நடத்தியும் கூட போலீஸ்பிடியிலிருந்து ஷோபா தப்பி வந்தார்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கூட போலீஸார் ஷோபாவை ராஜமரியாதைகொடுத்து உபசரித்துள்ளனர்.
இந் நிலையில்தான் ஷோபாவுக்கு செக் வைக்கும் வகையில் தங்களது பிடியில் உள்ளசாந்தாவை அப்ரூவர் ஆக்கி ஷோபா மீதான வழக்கை இறுக்க காவல்துறை முடிவுசெய்தது.
தற்போது தலைமறைவாக உள்ள பெச்சு ரஹ்மான், கூலிப்படையினர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சாந்தாவை வெளியில் கொண்டு வர போலீஸார் முடிவுசெய்துள்ளனர். இப்போதைக்கு போலீஸ் பாதுகாப்பிலேயே அவர் உள்ளதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications