ஓசி ரயில் பயணம்: உ.பி. அமைச்சருக்கு ஃபைன்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ :

உ.பி. மாநில அமைச்சர் ஒருவர் ரயிலில் தனது ஆதரவாளர்களுடன் டிக்கெட்எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டு அபராதம் கட்டியுள்ளார்.

உ.பி. மாநிலத்தில் ஹஜ் யாத்திரை துறை அமைச்சராக இருப்பவர் ஹாஜி யாகூப்குரேஷி.

இவர் நேற்று காலை லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்தார். அவருடன் ஆதரவாளர்கள் சிலரும்பயணித்தனர்.

ஆலம் நகர் என்ற நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம்டிக்கெட்டுகளை பரிசோதித்தனர். அப்போது அமைச்சர் மற்றும் அவரதுஆதரவாளர்களிடம் டிக்கெட்டுகளை கேட்டனர்.

இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். எங்களிடமே டிக்கெட்டாஎன்று கொந்தளித்தனர். ஆனாலும் விடாத டிக்கெட் பரிசோதகர்கள் காட்டியே ஆகவேண்டும் என்று கறாராக கேட்டனர்.

ஆனால் அமைச்சரிடமோ அவரது ஆதரவாளர்களிடமோ, பயணம் செய்வதற்கானடிக்கெட் எதுவும் இல்லை. வெறும் ரயில்வே கூப்பன் மட்டுமே இருந்தது.

இதையடுத்து டிக்கெட் இல்லா பயணத்திற்காக ரூ. 14,000 அபராதம் கட்டுமாறுஅமைச்சருக்கும், ஆதரவாளர்களுக்கும் பரிசோதகர்கள் உத்தரவிட்டனர்.

அவர்களும் வேறு வழியின்றி அபராதத்தை கட்டினர். அதன் பின்னரே ரயில் தனதுபயணத்தைத் தொடர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+