இன்னொரு போலி பிஷப்-இன்னொரு மகா மோசடி
சென்னை:
இலவச வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி காண்டராக்டர்களிடம் ரூ. 60 கோடிக்கு மேல் ஏமாற்றிய இன்னொருபோலி பிஷப் சத்தியசீலன் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
ஏழைகளுக்கு வீடுகட்டி தருவதாக கூறி காண்டராக்டர்களிடம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த போலி பிஷப்ஆனந்தராஜ் கைதானார். அதே போல இன்னொரு போலி பிஷப்பான யோபு சரவணனை போலீசார் தேடிவருகின்றனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.இந் நிலையில் யோபு சரவணனின் நெருங்கிய கூட்டாளியான புரசைவாக்கத்தை சேர்ந்த இன்னொரு போலிபிஷப் சத்தியசீலனும் இலவச வீடுகள் கட்டித்தருவதாக ரூ. 60 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ள விவரம் இப்போதுவெளியில் வந்துள்ளது.
யோபு சரவணனுடன் சேர்ந்து இவரும் பல காண்டிராக்டர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
சென்னை தானா தெருவில் முதலில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் பொதுச் செயலாளராக ஜோசப்மோன், ஜெபக்குழு தலைவராக சாலமோன் ஆகியோரை நியமித்துள்ளார்.
இந்தத் தொண்டு நிறுவனம் மூலம் வீக்கர் செக்ஷன் டெவலெப்மெண்ட் ஸ்கீம் என்ற பெயரில் ரூ. 500 கோடியில்ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை பிஷப் சத்தியசீலன் அறிவித்தார்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான காண்டராக்டர்கள் முன் வந்தனர். அதற்கு முன் பணம் கட்டவேண்டும் என்று சத்யசீலன் சொன்னதை நம்பி ஏராளமான காண்ட்ராக்டர்கள் லட்சக்கணக்கில் பணம்கொடுத்துள்ளனர்.
இந் நிலையில் பணம் கொடுத்த காண்டராக்டர்களுக்கு நீண்ட நாட்களாக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதிவழங்கப்படவில்லை. இதனால் காண்டராக்டர்கள் ஜோசப் மோனை சந்தித்தது எப்போது கட்டிடம் கட்ட அனுமதிதருவீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிஷப் சத்தியசீலன் நிதி திரட்ட வெளிநாடு சென்று இருக்கிறார்வந்தவுடன் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்து விடலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் 8 மாதம் ஆகியும் வீடுகட்ட அனுமதி கிடைக்காததாலும் போலி பிஷப் ஆனந்தராஜ், யோபு சரவணன்ஆகியோரின் மோசடிகள் வெளியாதாலும் காண்டிராக்டர்கள் தொடர்ந்து சத்யசீலனை சந்திக்க முயன்றுள்ளனர்.
அவர் சீனா சென்றுள்ளார், அமெரிக்கா சென்றுள்ளார் என்றே பதில் கிடைத்துள்ளது.
மேலும் இலவச வீடு திட்டத்திற்கு ரூ. 500 கோடி வந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்தவுடன்வீடு கட்டுவதற்கான பணம் ஒரு வாரத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் சாலமோன் கூறியுள்ளார்.
ஆனாலும் ஒன்றும் நடக்காததால் காண்டிராக்டர்கள், எங்களுக்கு எதுவும் வேண்டாம். பணத்தை மட்டும் திருப்பிகொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை ஜோசப் மோனும் சாலமோனும்சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் போலி பிஷப் சத்யசீலனோடு, ஜோசப் மோன், சாலமோன் ஆகியோரும் திடீரென தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து சென்னை சைதாபேட்டையைச் சேர்ந்த காண்டிராக்டர் சுப்பிரமணி என்பவர் இலவச வீடு கட்டஅனுமதி தருவதாக கூறி 1,000 காண்டராக்டர்களிடன் ரூ. 60 கோடி மோசடி செய்துவிட்டதாக போலி பிஷப் மீதுபோலிசில் புகார் கொடுத்துள்ளார்.
ஏழை மக்களிடமும் இலவச வீடு கட்டி தருவதாக கூறி மதுராந்தகம் தாலுகாவில் உள்ள 10க்கும் மேற்பட்டகிராமங்களில் ஆயிக்கணக்கான மக்களிடம் ரூ. 1,000 வீதம் நன்கொடை என்ற பெயரில் வசூலித்து மோசடிசெய்துள்ளார் எனவும் தனது புகாரில் சுப்பிரமணி கூறியுள்ளார்.
வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள போலி பிஷப் சத்யசீலனை பிடிக்க தனிப்படைகளைஅமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications