ஓட்டு கேட்டு வந்தால் டிவி கேளுங்கள்: வைகோ
சென்னை:
ஓட்டு கேட்டு வரும் திமுகவினரிடம் எங்கே இலவச கலர் டிவி என்று கேளுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் மதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு வைகோ பேசுகையில், நூலிழையில் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 4லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுத்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்திருக்கிறது, ஆட்சியையும் பிடிக்கமுடிந்திருக்கிறது.தள்ளாடும் அரசுதான் இங்கே அமைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல உங்களுக்கு கோடிக்கணக்கானமக்கள் ஆதரவு இருப்பதாக இருந்தால், மக்களே நேரடியாக மேயர்கள், நகராட்சித் தலைவர்களைதேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியது ஏன்?
எதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தீர்கள்? கவுன்சிலர்கள் சேர்ந்து மேயர், நகராட்சித் தலைவர்களைதேர்ந்தெடுக்கும் முறை ஏன்? அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறீர்கள். இதற்கு ஒரேகாரணம், திமுக கூட்டணி படு பயங்கரமான தோல்வியை சந்திக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற பயம் தான்காரணம்.
கோடிக்கணக்கில் செலவு செய்து ஆள் பிடிக்கிற, குதிரை பேரம் பேசுகின்ற, மக்களால் கொடுக்காத வெற்றியைகுறுக்கு வழியில் பெற்றிடத்தான் இந்த திட்டம் என்று நான் கூறுகிறேன்.
சென்னை மாநகராட்சி அதிமுகவின் கோட்டை. இதை சட்டசபைத் தேர்தலில் நிரூபித்தோம். உள்ளாட்சித்தேர்தலிலும் இதை அதிமுக நிரூபிக்கும். ரிப்பன் மாளிகை அதிமுகவின் கோட்டையாக மாறும். மாநகராட்சிநிர்வாகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை, துயரம், கஷ்டம் இல்லாத வாழ்க்கை தேவை. அதை கொடுத்ததுஅதிமுக அரசு தான்.
சிக்குன் குனியா நோய் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரக்கணக்கில், மாதக் கணக்கில்வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். 250க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.ஆனால் திரும்பத் திரும்ப யாரும் சாகவில்லை என்கிறீர்கள்.
இறந்தவர்கள் பெயர்ப் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டால், அவர்களின் குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள்.யாரும் சாகவில்லை என்று மிரட்டி சொல்ல வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு மனிதாபிமானமே கிடையாதா? இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொல்கிறேன், நீங்கள்கொடுக்கிற பாடம்தான் இந்த தருணம்.
வீட்டுக்கு வீடு கலர் டிவி தருவேன் என்றார்கள். மக்களே, திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் எங்கே கலர் டிவிஎன்று கேட்டு விரட்டுங்கள். வன்முறை மூலம் ஜனநாயக படுகொலை செய்ய நினைத்தால், அதை சந்திப்போம்.அதிமுக கூட்டணி பட்டாளம் அதையும் சந்திக்கும் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications