பி.இ, எம்பிபிஎஸ்: நுழைவுத் தேர்வு நீடிக்குமா?
சென்னை:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கானநுழைவுத் தேர்வு குறித்து முடிவு செய்ய நிபுணர் குழு கூட்டம் இன்று சென்னையில்கூடுகிறது.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க முன்னாள்அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழகஅரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.இக்குழுவில் அனந்தகிருஷ்ணன் தவிர உயர்கல்விக்துறை செயலாளர் கணேசன்,தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் எஸ்கே.பிரபாகர், சட்டத்துறைச் செயலாளர்தீனதயாளன், முன்னாள் செயலாளர் பார்த்தசாரதி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துணைவேந்தர் தங்கமுத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னைமற்றும் மதுரையில் பொது கலந்தாய்வு கூட்டத்தை இக்குழு நடத்தியது.
இக் கூட்டத்தில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறிப்பாககிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்என்றும் நகர்ப்புற மாணவர்களும் பெற்றோரும் நுழைவுத்தேர்வு அவசியம் தேவைஎன்றும் கூறினார்கள்.
மேலும் தபால் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் இக்குழுவுக்கு கருத்துக்கள்அனுப்பபப்ட்டன. இவை குறித்து கடந்த மாதம் கிண்டியில் உள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் குழு கூடி விரிவாக விவாதித்தது.
இந்த நிலையில் நுழைவுத் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்க இன்று இக்குழுவின்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு வருகிற 15ம் தேதிஅரசிடம் சமர்ப்பிக்கப்படும். குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில்தமிழக அரசு நுழைவுத் தேர்வை வைத்துக் கொள்ளலாமா அல்லது ரத்து செய்துவிடலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications