திமுக எம்எல்ஏவை கைது செய்ய கோரும் சிபிஎம்
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது ரெளடிகளுடன் சேர்ந்து கொண்டு கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மட்டும் திமுக கூட்டணியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8வார்டுகளில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் எட்டிலுமே தோல்வியைத் தழுவியது.
வாக்குப்பதிவு நாளன்று பெருமளவில் நடந்த வன்முறை மற்றும் முறைகேடுகளைக் கடுமையாக கண்டித்தமார்க்சிஸ்ட் கட்சி, இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி வருகிறது.மேலும் திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜனை வரவழைத்து திமுக தலைவரும், முதல்வருமானகருணாநிதி பேசினார். அப்போது எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்என்று கருணாநிதி அறிக்கை விட்டார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டன.ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி சமாதானம் அடையவில்லை என்று தெரியவில்லை.
இந் நிலையில், திமுக எம்.எல்.ஏ. பாபுவைக் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுதொடர்பாக தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் டி.கே.சண்முகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் வன்முறை மற்றும்முறைகேடுகள் பெருமளவில் நடந்தன.
மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 8 வார்டுகளிலும் வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தேவிஉள்ளிட்ட எங்களது கட்சி வேட்பாளர்கள் மீது, திமுக எம்.எல்.ஏ.பாபுவும் அவரது தொழில்முறை ரெளடிகளும்சேர்ந்து கொண்டு கொலை வெறித் தாக்குதலை நடத்தினர்.
எனவே பாபுவையும், அவருடன் வந்த ரெளடிக் கும்பலையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதேபோலதிமுக மண்டல செயலாளர் தனசேகரன், திமுக வட்டச் செயலாளர் பூட்டோ என்கிற கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும்பெரும் ரெளடிக் கும்பலுடன் சேர்ந்து தென் சென்னை மாவட்ட கமிட்டி உறுப்பினர் மணிகண்டன், வேட்பாளர்சரளா மற்றும் கட்சித் தொண்டர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையை கண்டித்தும், மறு தேர்தல் நடத்தக் கோரியும், நாளைசென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அப்போது திமுக எம்.எல்.ஏ பாபுவைக் கைது செய்ய வேண்டும், மாநில தேர்தல் ஆணையர், மாநிகர காவல்துறைஆணையர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மறு தேர்தல் நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக எம்.எல்.ஏ.வைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications