மாணவனை விறகு கட்டையால் அடித்த ஆசிரியை
சென்னை:மாணவனை விறகுக் கட்டையால் அடித்ததாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின்ஆசிரியை, விடுதி வார்டன், உதவியாளர் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்தவ மிஷனரி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் பள்ளிஉள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்கும் காப்பகமும் உள்ளது. இங்குஎண்ணூரைச் சேர்ந்த நேசராணி என்ற மீன் விற்கும் பெண்ணின் மகன் மோசஸ் (வயது11) படித்து வருகிறான்.
நேசராணி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில்,7வது வகுப்பு படிக்கும் தனது மகனை ஆசிரியை சுதா, தரையை சுத்தப்படுத்தபணித்துள்ளார். அதை சரியாக செய்யவில்லை என்று கூறி விறகுக் கட்டையால்அடித்துள்ளார். இதில் மோசஸுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவனை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம்.
அந்த ஆசிரியை மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த விடுதிக் காப்பாளர்தேவசகாயராஜ், உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாணவன்மோசஸ், மற்ற மாணவர்களின் சாப்பாட்டைப் பறிப்பது, ஆசிரியர்களை கிண்டல்செய்வது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டுள்ளான். அதைத் தட்டிக் கேட்கத்தான்ஆசிரியை சுதாவும், விடுதி வார்டன், உதவியாளர் ஆகியோர் சேர்ந்து அடித்தது தெரியவந்தது.
ஆனால், விறகு கட்டையால் மாணவனைத் தாக்கியது தவறு என்பதால் ஆசிரியைஉள்ளிட்ட 3 பேரையும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவின் போலீஸார்கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications