கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது-காங் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிப்பதாக காங்கிரஸ்கட்சி அறிவித்துள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கும்மதிமுகவுக்கும்காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து விலகியபோது, மதிமுக தொடர்ந்து மத்திய அரசுக்குஆதரவு அளிக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் நீடிக்கும் என வைகோஅறிவித்தார். ஆனால் மதிமுக கூட்டணியில் நீடித்தால் திமுக விலகும் என கருணாநிதிஎச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஐக்கியமுற்போக்குக் கூட்டணிஒருங்கிணைப்புக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு மதிமுகவுக்கு காங்கிரஸ்மேலிடம் அழைப்பு அனுப்பாமல் இருந்தது.

இதனால் மதிமுக கூட்டணியில் இல்லை என்று கருணாநிதி விளக்கியிருந்தார்.

இந் நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள், இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற கொறடாக்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மதிமுகவுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிமுககூட்டணியில் இல்லை என்று கருணாநிதி கூறியுள்ள நிலையில் கொறடாக்கள்கூட்டத்திற்கு மதிமுகவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது குறித்து காங்கிரஸ் தரப்பில்கூறுகையில்,

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய நிலை அது. இப்போது சட்டசபைத் தேர்தல்முடிந்த பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் (அதாவது திமுக சிறுபான்மை அரசாக,காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர்) இதுபோன்றகருத்தை திமுக வற்புறுத்தாது.

மத்திய அரசுக்கு மதிமுக ஆரம்பம் முதலே ஆதரவு அளித்து வருகிறது.அமைச்சரவையிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அமைச்சர் பதவி கொடுத்தும்மதிமுக அதை அன்போடு மறுத்து விட்டது.

மேலும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின்நிலையில் மாறுதல் ஏற்பட்ட போதிலும் கூட, பிரமதர் மன்மோன்சிங்கை மதிமுகபொதுச் செயலாளர் வைகோ சந்தித்து தனது கட்சியின் முழு ஆதரவைஉறுதிப்படுத்தினார். எனவே மதிமுக ஒருபோதும் கூட்டணியிலிருந்துநீக்கப்படவில்லை.

தொடர்ந்து கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சியாக மதிமுக விளங்குகிறது.அந்த அடிப்படையில், மதிமுகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றுதெரிவித்தனர்.

இந்த அதிரடி பகிரங்க அறிவிப்பால் திமுகவுக்கு நோஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.ஏற்கனவே திமுக அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில்கோஷம் வலுத்து வரும் நிலையில், திமகவுக்கு செக் வைக்க மதிமுகவை காங்கிரஸ்பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+