கருணாநிதி-ப.சிதம்பரம்: ஆளுக்கு 3 கோரிக்கை
சென்னை:சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டிலேயே நிதிஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்உறுதியளித்தார்.
சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில்சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வரிடம் தனது சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி தொசர்பாக 3 முக்கிய கோரிக்கைகளை வைத்தார் ப.சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட் தாதுவை அடிப்படையாகக் கொண்டுஅங்கு கிராபைட் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். இது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் அபரிமிதமாக கிடக்ைகும் வேப்பங் கொட்டைகளைவைத்து உரத் தொழிற்சாலையை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கண்டனூரில், தான் வழங்கிய 26 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள காதி,கிராம தொழில் வாரிய தொழிற்சாலைகளை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும்ஆகிய கோரிக்கைகளை முதல்வ>டம் சிதம்பரம் முன் வைத்தார். இந்தக்கோரிக்கைகளை ஏற்று உடனடி நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதி 3 முக்கிய கோரிக்கைகளை சிதம்பரத்ததிடம் முன்வைத்தார்.
சென்னை மாநகர குடிநீர்த் தேவைக்கான கடல் நீரைக் குடிநீராக்கும் 2 திட்டங்களுக்குவிரைவில் நிதியுதவி அளிக்க வேண்டும், ஊரக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைமேம்படுத்த நபார்டு நிறுவனத்திலிருந்து கூடுதல் நிதியுதவியைப் பெற்றுத் தரவேண்டும் என்று முதல்வர் கோ>க்கை விடுத்தார்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டுக்குள்ளேயே நிதியுதவிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் உறுதியளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications