விஜய்காந்தும் கருப்பு பணமும்-தமிழருவி மணியன்

Subscribe to Oneindia Tamil

கோவை:உழைக்காமல், மூலதனம் போடாமல் கோடி, கோடியாக சம்பாதிக்க ஒரே வழி அரசியல் தான் என்று நினைத்துநிறைய பேர் அரசியலுக்கு வருகிறார்கள் என தமிழகத்தின் மிக நேர்மையான ஒரு சில காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Tamilaruvi Manian

சோனியா அளவுக்கு நெருக்கம் கொண்டவர் என்றாலும், நீண்டகாலமாக அரசியலில் இருந்தாலும் நயா பைசாசம்பாதிக்காதவர் இந்த மணியன். பதவி கேட்டு அலையாத இந்த அரிய மனிதரின் தாயார் சமீபத்தில் உடல் நிலைபாதிக்கப்பட்டபோது சென்னை அரசு மருத்துவமனையில் பொது வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தார். அந்தஅளவுக்குத் தான் அவரது பொருளாதார நிலை இடம் தந்தது.

சமீபத்தில் ஒரு காங்கிரஸ் விழாவில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மேடையிலேயே வைத்துக் கொண்டுஅவரை ஒரு பிடி பிடித்தார். மணியன் பேசுகையில், சிதம்பரம் அவர்களே, வானத்தையே பார்த்துக் கொண்டுஇருக்காமல், கொஞ்சம் தரையையும் பாருங்கள். ஏழைகளையும் மனதில் வைத்து திட்டங்கள் போடுங்கள்என்றார். இதனால் மேடையிலேயே நெளிந்தார் ப.சி.

P.Chidhambarm

இந் நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கோவை அவினாசியில் பகத்சிங் நூற்றாண்டு மலர்வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழருவி மணியன் பேசியதாவது,

நான் அரசியலுக்கு வர தூண்டுதலாக இருந்தவர் காமராஜர்தான். தன்னலமற்ற தியாகி காமராஜர். எதையும்எதிர்பார்க்காமல் நாட்டு மக்களின் நலனில் அளவற்ற அக்கறை கொண்ட தன்னிகரற்ற தலைவர் காமராஜர்.ஆனால் இப்போது அரசியலுக்கு போனால் ஆதிக்கம் செலுத்தலாம், உழைக்காமல், மூலதன் இல்லாமல் கோடி,கோடியாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் நிறைய பேர் அரசியலுக்கு வருகிறார்கள்.

ஊழலற்ற அரசியலை உருவாக்க என் பின்னால் வாருங்கள் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் சொல்கிறார்.இவர் ஒரு பைசா கூட கருப்பு பணம் வாங்கியதில்லை என்று சத்தியம் செய்து சொல்லட்டும். அரசுக்கு எவ்வளவுவரி கட்ட வேண்டும், அதை நான் கட்டுகிறேன் என்று அறிவிப்பாரா?.

தான் நடிப்பின் மூலம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் ஏழை எளிய மக்கள் நலனுக்காகவே செலவு செய்தவன்என்று கூறட்டும். அவரால் முடியுமா?

இவரது கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் ஏதும் வசூல் செய்யாமல் படிக்கவைக்கிறாரா? அல்லது இவரது திருமண மண்டபத்தில் ஏழைகள் மற்றும் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்குகட்டணம் வசூலிக்காமல் மண்டபம் தருவாரா?

உலகில் உள்ள 175 நாடுகளில் இந்தியா சுகாதார நிலை தரத்தில் 171வது இடத்தில் இருக்கிறது.தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 45,000 ஆயிரம் கோடி வராக்கடன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணத்தை அமுக்கியவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் தான். இந்த வராக்கடனை அரசு வசூலித்தால் நாட்டின்வளம் பெருக 15,000 மொகவாட் மின்சார திட்டங்களை செயல்படுத்த முடியும்.

சுகாதாரத்தில் கடை கட்டத்தில் நிற்கும் நிலையை மாற்றி சுகாதார தரத்தை உயர்த்தலாம். பல தொழிற்சாலைகள்ஏற்படுத்தி வேலை வாய்ப்பை பெருக்கலாம். இவை போன்ற செயல்கள் நடைமுறைப்படுத்த நல்ல தலைவனைதேர்வு செய்ய வேண்டும். அது கம்யூனிசத்தால் மட்டும் தான் முடியும். எதையும் எதிர்பார்க்காத உள்ளம்இருந்தால் நினைத்ததை நினைத்தபடி பேச முடியும்.

1931 மார்ச் 23ம் தேதி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவரது முகத்தை கருப்பு துணியால் மூட அவர் மறுத்துவிட்டார். மரண பயம் உள்ளவர்களுக்கு தான் கருப்பு துணி. மரண பயமற்றவர்களுக்கு அல்ல. பகத்சிங் மரணம்பயம் அற்றவர். அதே போல தான் சதாம் உசேனும். சதாமுக்கு தண்டனை தரும் உரிமை ஈராக் மக்களுக்கு தான்உண்டு அமெரிக்காவுக்கு கிடையாது.

மிக மோசமான காரியத்திலிருந்து விடுபிட்ட சமூகமாக வளர வேண்டும். பகத்சிங் போல் இளைஞர்கள் செயல்படவேண்டும். சமதர்மத்தை உருவாக்கும் பொறுப்பு இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்றார் மணியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+