பிற்படுத்தப்பட்டோர் நலன்- கருணாநிதி பெருமிதம்
சென்னை:நான் 1970ம் ஆண்டு முதல்வராக இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்தை மனதில் கொண்டுபிற்படுத்தப்பட்டோர் நலக் குழு முதன்முதலாக அமைக்கப்பட்டது என முதல்வர் கருணாநிதி கூறினார்.
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய முன்னாள் தலைவர் சட்டநாதன் எழுதிய மனம் திறந்து பேசுகிறேன் - சூத்திரர்கதை என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நூலை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் வெளியிட முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.இதையடுத்துப் பேசிய கருணாநிதி.
நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செல்லும்போது அதை முழுமையாக படித்து விட்டு செல்வது மிக முக்கியம். இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும் போது நூலை படிக்காமல் செல்லும் வழக்கம் எனக்கு இல்லை. இந்த நூலில்கூட ஒரு பக்கம் விடாமல் அனைத்தையும் படித்து முடித்து விட்டுத்தான் வந்துள்ளேன்.
இதை படித்தபோது சமுதாயத்தின் பழைய நிகழ்வுகள் என் நினைவில் வருகின்றன. 1970ம் ஆண்டு நான்முதல்வராக இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடுபிற்படுத்தப்பட்டோர் நலக் குழு முதன்முதலாக அமைக்கப்பட்டது.
அப்போது அதன் தலைவராக சட்டநாதன் நியமிக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுதொடர்பாக ஜனாதிபதி தற்போது கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்த நூலில் உள்ள கருத்துக்களுக்கு வெற்றிகிடைத்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக தான் இருந்தபோது எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து நூலில்விரிவாக குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் ஒரு மனிதருடைய வாழ்க்கை வரலாறு என்ற நிலையில் இல்லாமல்சமுதாயத்தில் பின்னிப் பிணைந்துள்ள அவலங்களை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த நூலில் ஒரு தேவதையின் காதல் கதையையும் குறிப்பிடப்பட்டுள்ளது. காதல் கதை இருந்தால் தான் இந்தகாலத்தில் கவர்ச்சியாய் புத்தகம் விற்பனையாகிறது என்பதற்காக சேர்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இந்த விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் எனக்கேட்ட போது, நூலின் பெயரை "சூத்திரரின் கதை என்றுசொன்னார்கள். இதிலே மணி சங்கர் அய்யரும் கலந்து கொள்கிறார் என்றபோது, வெளியிடுவதே "நூல் (பூணூல்)தானே. நீங்கள் தவறாக கருதக்கூடாது. அவர் நூலை வெளியிடுவதை நான் சொன்னேன்.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்களால் (பிராமண எதிர்ப்பு கருத்துகள்) மணி சங்கர் அய்யர்வருத்தப்பட மாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் அந்த கட்டத்தை தாண்டி வந்து தான் இன்றுநம்மோடு இருக்கிறார். நாங்களும் அவரோடு இருப்பவர்கள் தான் என்றார்.
மணிசங்கர் அய்யர் பேசுகையில், கல்விதான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. நாம் தற்போது புதியயுகத்தில் உள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications