தாவூதின் முக்கிய கூட்டாளி அமெரிக்காவில் கைது
மும்பை:மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பெரோஸ் அப்துல் ரஷீத்கான் அமெரிக்க போலீஸாரிடம் சிக்கியுள்ளான்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பை நகரில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்து 250க்கும் மேற்பட்டோர்பலியாயினர். தாவூத் இப்ராகிம் தலைமையிலான கும்பல்தான் இந்த தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணம் எனபோலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தாவூத் கும்பல் பாகிஸ்தானுக்குத் தப்பி விட்டது. மும்பையில் வெடித்தகுண்டுகளுக்கான வெடிமருந்துகளை மும்பைக்குக் கொண்டு வந்தது பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மற்றும் அபுசலீம் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் அபு சலீம் கடந்த ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டான். ரஷீத் கான்தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான்.
துபாயில் அவன் பதுங்கியிருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது. இந் நிலையில் அமெரிக்க குடியு>மையைப் பெற்றரஷீத் கான் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அவனை இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா கைதுசெய்துள்ளது.
இதையடுத்து ரஷீத் கானை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வரும் முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது.
ரஷீத் கான் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அமெரிக்க போலீஸாருக்கு இந்தியா வழங்கியுள்ளது.
பெங்களூரில் பயங்கர தீவிரவாதி கைது
இந் நிலையில் பெங்களூரில் ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
ஜாலஹள்ளி என்ற இடத்திற்கு அருகே உள்ள கோரேகுண்டபாளையா என்ற இடத்தில் அதிகாலை ஒரு பேருந்திலிருந்து அந்த தீவிரவாதி இறங்கினான்.
அவனை வளைத்துப் பிடித்த போலீஸார் அவனிடம் சோதனை நடத்தியதில் ஏ.கே. 47 துப்பாக்கி, 300 ரவுண்டு வெடிபொருள், 4 துப்பாக்கி தோட்டாபட்டைகள், ஐந்து கையெறி குண்டுகள், பெங்களூர் நகரின் வரைபடம் உள்ளிட்டவை சிக்கின.
இந்தக் கைது குறித்து டிஜிபி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அவனது பெயர் இம்ரான் என்கிற பிலால். ஹோஸ்பேட்டையிலிருந்து ஒரு தீவிரவாதிபேருந்தில் வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜாலஹள்ளி அருகே நாங்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது இந்த தீவிரவாதி பிடிபட்டான். போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தபோது அவன் அதிக எதிர்ப்பு காட்டவில்லை. அவனிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள், செல்போன், சாட்டிலைட் போன், சில சிம்கார்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூர் நகர வரைபடமும் அவனிடம் இருந்தது. பெங்களூரின் முக்கிய இடங்களான விதான் செளதா, இன்போசிஸ் உள்ளிட் பல முக்கிய இடங்களை குண்டுவைத்துத் தகர்க்கும் நோக்குடன் அவன் ஊடுறுவியுள்ளான்.
இவன் பிடிபட்டதன் மூலம் பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியையும் விசாரணைக்கு நாடியுள்ளோம் என்றார்.
சில மாதங்களுக்கு முன்புதான் மைசூர் அருகே 2 தீவிரவாதிகள் பிடிபட்டனர். பெங்களூர் நகரைத் தகர்க்க அவர்கள் சதி திட்டம் தீட்டியிருந்தது அப்போதுவெளியானது. தற்போது பெங்களூர் அருகே இன்னொரு தீவிரவாதி பிடிபட்டிருப்பதால் கர்நாடகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூர், மைசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications