5 வருடமாய் சொத்து வரியே கட்டாத விஜயகாந்த்!
சென்னை: தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த சொத்துக் கணக்கிற்கும், வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்த சொத்துக்கணக்குக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்ததால்தான் நடிகர் விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனைநடத்தப்பட்டது. இதில் அரசியல் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம்விளக்கம் தந்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அரசியல் அரங்கில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கு கருணாநிதி தான் காரணம் என விஜய்கந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், விஜய்காந்தின் சொத்துக்களுக்கு கணக்கு, வழக்கே இல்லை என ரெய்ட் நடத்திய வருமான வரித்துறைகூறியுள்ளது.
இந் நிலையில் விஜயகாந்த் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கினார். இவர்தான் ரெய்டு போன்ற நடவடிக்கைகளுக்குபொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழனிமாணிக்கம் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த் அப்போது தேர்தல்ஆணையத்திடம் கொடுத்த சொத்து விவரங்களுக்கும், வருமான வரித்துறையிடம் கொடுத்துள்ள விவரங்களுக்கும்நிறைய முரண்பாடுகள் உள்ளன.
விஜய்காந்த் பெயரில் ரூ. 2.5 கோடிக்கும், அவரது மனைவி பிரேமலதா பெயரில் ரூ. 2.35 கோடிக்கும் தனியாகசொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் வரியையே கட்டவில்லை.இதுகுறித்து வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் சோதனைநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில் உள்ள விஜயகாந்த் உறவினருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூ>யில் ரூ. 35 கோடி அளவுக்குவங்கியிலிருந்து கடன் வாங்கியதாக கூறினர். ஆனால் எந்த வங்கி, எவ்வளவு வாங்கினார்கள், எப்போதுவாங்கினர் என்பதற்குரிய கணக்குகளும் முறையாக இல்லை.
இந்த வருமான வரி சோதனை முழுக்க முழுக்க விஜயகாந்த்தின் சொத்துக் கணக்கில் நிலவிய முரண்பாடுகள்தொடர்பாகத்தான் நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆதாரம் கிடைத்தால் எந்தஅரசியல்வாதியின் மீதும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயங்காது.
மேலும் கடந்த இரு ஆண்டுகளாக ஒவ்வொரு படத்திலும் தனக்கு தலா ரூ. 5லட்சம் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவிஜய்காந்த் கூறியிருக்கிறார்.
தொழிலதிபர் ஜேப்பியார் சமீபத்தில் வங்கியிலிருந்து ரூ. 11 கோடி பணத்தை எடுத்துள்ளார். அதை அவர் என்னசெய்தார், எங்கு முதலீடு செய்தார் என்பதற்கு கணக்கு இல்லை. எனவேதான் அவரது இருப்பிடங்களிலும்சோதனை நடத்தப்பட்டது என்றார் பழனிமாணிக்கம்.
இதற்கிடையே கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜய்காந்துக்கு ஜேப்பியார் ரூ. 10 கோடி கொடுத்ததாகவும்,ஜெயா கல்லூரியின் நிறுவனர் கனகராஜ் ரூ. 1 கோடி கொடுத்ததாகவும் நக்கீரன் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications