வாகரையில் ராஜபக்ஷே: ஆவேச கொக்கரிப்பு!
வாகரை:விடுதலைப் புலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றிய வாகரை நகரில் இன்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே சுற்றுப்பயணம் செய்து ராணுவஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்கு நகரமான வாகரையை சில வாரங்களுக்கு முன் ராணுவம் கைப்பற்றியது. அப்பகுதியில் உள்ளதமிழர்களை விரட்டியடித்து விட்டு இந்த நகரை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில் அதிபர் ராஜபக்ஷே இன்று வாகரை நகருக்கு வந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்பேசுகையில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் சண்டையை அவர்கள் சந்திக்க வேண்டும்.
இலங்கை அரசின் சார்பில் அரசியல் தீர்வுக்கான வழிகள் கூறப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கையை நாங்களும் விரும்பவில்லை.பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன.
பேச்சுவார்த்தைக்கு புலிகள் முன் வர வேண்டும். அவர்களை பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்நான் செய்து வருகிறேன்.
அதேசமயம் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால் கடுமையான ராணுவ நடவடிக்கையை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்ராஜபக்ஷே.
ஹெலிகாப்டர் மூலம் வாகரைக்கு வந்த ராஜபக்ஷே ராணுவ வீரர்களையும் சந்தித்தார். பின்னர் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டஆயுதங்களையும் அவர் பார்வையிட்டார்.
இப்பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளை அகற்றும்பணி ராணுவத்திற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ராஜபக்ஷே கூறுகையில், முதலில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அது மிகப் பெரிய வேலையாக உள்ளது. அதன் பிறகுஇப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குடியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கண்ணிவெடிக்கு 11 பேர் பலி:
இதற்கிடையே இன்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் 6 போலீஸார் உள்பட 11 பேர் பலியானார்கள். கிழக்குப் பகுதியில் இந்தத் தாக்குதல்நடந்துள்ளது.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில், சிக்கி இவர்கள் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர். சில நாட்களுக்குமுன்புதான் 12 ராணுவத்தினர் கண்ணி வெடியில் சிக்கிப் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
ராஜபக்ஷே அமைச்சரவை மேலும் வீங்கியது:
இதற்கிடையே இலங்கையில் அதிபர் ராஜபக்ஷேவின் அமைச்சரவை 107 பேர் கொண்டதாக விரிவடைந்துள்ளது.
அதிபர் ராஜபக்ஷேவின் சுதந்திராக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. இதனால் சில தமிழர் மற்றும் சிங்களக் கட்சிகளின் துணையுடன்ஆட்சி நடந்து வருகிறது.
தனது கட்சிக்கு தனிப் பெரும்பான்மை பலத்தை சேர்ப்பதற்காக, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார் ராஜபக்ஷே. அக்கட்சியிலிருந்து 18எம்.பிக்கள் சமீபத்தில் விலகி ராஜபக்ஷே கட்சியில் சேர்ந்தனர்.
18 பேருக்கும் அமைச்சர் பதவி கொடுத்தார் ராஜபக்ஷே. இதனால் ஆளுங்கட்சிக்குள் முனுமுனுப்பு எழுந்தது. எதிர்க்கட்சியிலிருந்து விலகி வந்தவர்களுக்குமுக்கியத்துவம் தருவதா என்ற அதிருப்தி கிளம்பியது.
இதனால் அதிருப்தியாளர்களை சமாளிக்க மேலும் 2 பேரை அமைச்சராக்கியுள்ளார் ராஜபக்ஷே. இதன் மூலம் அமைச்சரவையின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடி, உள்நாட்டுப் போரால் சிக்கித் திணறி வரும் இலங்கைப் பொருளாதாரம், இந்த மாபெரும் அமைச்சரவையால் மேலும் பெரிய நிதிநெருக்கடியை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு அமைச்சருக்கும் தரப்படும், வீடு, கார், பிற வசதிகளுக்காக மாதச் செலவே பல கோடியைத் தாண்டுகிறதாம். தற்போது 100க்கும் மேற்பட்டோர்அமைச்சர்களாக உள்ளதால் இவர்களுக்கே பெரிய அளவில் பட்ஜெட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர்களின் பாதுகாப்புக்கும் அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது. இவற்றை ராஜபக்ஷே எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற பெரும் கேள்விஎழுந்துள்ளது.
கருணாநிதிக்கு பிரதமர் பதில் கடிதம்:இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுவதற்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் மன்மோகன் சிங்கூறியுள்ளார்.
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். இதற்கு பதிலளித்துகருணாநிதிக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். அதன் மூலம் தமிழக சட்டசபையின் உணர்வுகளை என்னால்புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கையில் பெருகிவரும் வன்முறை குறித்து தமிழ்நாடு சட்டசபை கொண்டுள்ள கவலையில் மத்திய அரசு பங்கு கொள்கிறது என்பதை நான் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தின் மூலம் அறிவீர்கள்.
வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றிருந்தபோது, இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயிடம் இந்திய உணர்வுகளையும், கவலைகளையும் விளக்கினார்.
இலங்கையில் வாழும் தமிழ் குடிமக்களின் சட்டப் பூர்வமான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு அமைதியான சூழலில் பேச்சு வார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து துணைநிற்போம்.
இவ்வாறு மன்மோகன் சிங் தனது கடித்தத்தில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications