படம் பார்க்க சென்ற 21 மாணவிகள் மயக்கம்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:காமராஜர் படத்தைப் பார்க்க பள்ளியிலிருந்து லாரியில் அழைத்துச் செல்லப்பட்ட 21 மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்புஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது ஆர்.எஸ்.மங்கலம். இந்த யூனியனுக்குட்பட்ட உப்பூர் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தியேட்டரில் காமராஜர் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை மாணவ, மாணவிகள் பார்ப்பதற்காகஉப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதையடுத்து ஒரு லாரி மூலம் நேற்று காலை 11 மணிக்கு மாணவ, மாணவிகளை தனித் தனியாக அழைத்துச் சென்றனர். மாணவிகள்செல்லும்போது மொத்தம் 150 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஊரணக்குடி என்ற இடத்தில் லாரி சென்றபோது அதில் 21 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. லாரிக்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.இதையடுத்து அவர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடும் வெயில் அடித்து வரும் நிலையில், மாணவிகளை லாரியில் வைத்துக் கூட்டிச் சென்றதற்காக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அபிமன்னன், 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்தோடு 3 ஆசிரியர்கள், லாரி டிரைவர், கிளீனர் ஆகியோர் கைதும் செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+