கர்நாடகத்தில் பெரும் பதற்றம்: பெங்களூரில் பீதி
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்ததையொட்டி கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் பலத்த போலீஸ் மற்றும்பிற மாநில போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரிலிருந்து கணிசமான அளவுக்குதமிழர்கள் வெளியேறிவிட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.
கடந்த 1992ம் ஆண்டு தமிழகத்துக்கு 105 டிஎம்சி நீரை தருமாறு நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்ததையடுத்து கர்நாடகத்தில்பெரும் கலவரம் வெடித்தது. தமிழர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது அன்றாடங் காய்ச்சிகளும் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்திய ஏழைகள் தான்.
இந் நிலையில் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நேற்று முதலே பரவ ஆரம்பித்தது.
இதையடுத்து பெங்களூரு மற்றும் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான மாண்டியா, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புபன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் மட்டும் 18,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் கேரளா,ஆந்திரா, மகாராஷ்டிர மாநில போலீஸார் ஆவர். இதுதவிர கர்நாடகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து 100 காவல்துறை அதிகாரிகளும், 600போலீஸாரும் பெங்களூருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவித நிலைமையையும் சமாளிக்கும் வகையில் பெங்களூரு போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பதட்டமானபகுதிகளிலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் ...
இதேபோல காவிரிப் பாசன மாவட்டங்களான மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர், பெங்களூர் ஊரகம், ஹசன், தும்கூர் ஆகியவற்றிலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளிலும் தமிழர்கள் கணிசமாக வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாண்டியா மாவட்ட எஸ்.பி. பிரகாஷ் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக ரிசர்வ் போலீஸ் படைகள்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட் ஆயுதப் படை வீரர்கள், அதி விரைவுப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்என்றார்.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களிலும் வெளி மாநிலப் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் மூடல்:
பெங்களூரில் பல பகுதிகளில் இன்று பள்ளிகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுவிட்டன.
ஓசூரிலும் போலீஸ் குவிப்பு:
கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள தமிழக தொழில் நகரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னட மொழி பேசுவோர் கணிசமாக உள்ளனர்.
எனவே காவிரித் தீர்ப்பு எதிரொலியாக இம்மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக போலீஸார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியேறும் தமிழர்கள்:
நேற்று மாலை முதலே ஓசூர் பஸ் நிலையத்தில்,பெங்களூரிலிருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. கடந்த 1991ல் ஏற்பட்டவன்முறையைப் போல இப்போதும் வெடிக்கலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்த அவர்கள் கர்நாடக போலீஸாரை நம்ப முடியாது என்றும்தெரிவித்தனர்.
வெளியேறும் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழிலாளிகள் ஆவர். கடந்த முறை காவிரி கலாட்டா நடந்தபோது மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது இவர்கள் தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications