ஓராண்டில் நடுவர் மன்ற தீர்ப்பு அமலாகும்-சோஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும் என மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் கூறினார்.

கோவையில் நடந்த சர்வதேச நிலத்தடி நீர் கருத்தரங்கில் பேசிய அவர்,

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என கெடு விதித்ததாக சில பத்திரிக்கைகளில் வெளியானது தவறானசெய்தி. கர்நாடகம் உச்சநீதிமன்றம் செல்வது அந்த மாநிலத்தின் உரிமை. இந்த தீர்ப்பு குறித்து 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் தங்கள் கருத்துதெரிவிக்கலாம்.

ஓராண்டுக்குள் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு சட்டபடி அமல்படுத்தப்படும். நீர் பங்கீடுகளை கண்காணிப்புக் குழு கண்காணிக்கும்.

தென்னக நதிகளை இணைப்பது பற்றி 16 ஆய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன. இது மிகப் பெரிய திட்டம் என்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்சம்மதம் அளிக்க வேண்டும்.

நதி நீர் அதிகமுள்ள மாநிலங்கள் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு நீரை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசு செய்துள்ளது.இது தொடர்பான மாசோதாவை தாக்கல் செய்ய மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது அவசியம்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் இரு மாநிலங்களும் மத்திய அரசை அணுகினால் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவோம், அவர்கள்நீதிமன்றத்துக்கு செல்வதாக இருந்தால் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை என்றார்.

கங்கை-காவிரி இணைக்க கோரும் வீரபாண்டி:

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகஅரசு நீதிமன்றத்திற்க்கு சென்றால், தமிழகமும் தீதிமன்றத்தை அணுகும் என்றார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பை எதிர்த்த கர்நாடக மாநிலம் நீதிமன்றத்திற்கு சென்றால், தமிழகத்தின் உரிமையைநிலைநாட்டுவதற்காக தமிழகமும் நீதிமன்றத்தை அணுகும்.

சேலம் ரயில்வே கோட்டம் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இந்த கோட்டத்திற்காக ஊழியர்களின் குடியிருப்பு கட்டுவதற்காக நிலம்ஒதுக்கவில்லை என்று கூறுவது தவறானது. நாங்கள் இதற்காக ரயில்வே கோட்டத்திற்கு அருகிலேயே நிலம் ஒதுக்கியுள்ளோம். இது தொடர்பாககடிதம் முதன்மை செயலாளர் மூலம் தென்னக ரயில்வேக்கு அனுப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக கருத்தரங்கில் ஆறுமுகம் பேசுகையில்,

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு நீர் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பெரியஅளவிலான நீர் தேக்க திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வாயப்புகள் மிக குறைவாகவுள்ளது.

அதனால் ஏரிகள், குளங்கள் போன்றவற்றை பேணி காப்பது அவசியமாகிறது. இந்திய அலவில் நீர் உபரியாக உள்ள மாநிலங்களிலிருந்து நீர்பற்றாக்குறையாக உள்ள மாநிலங்கள் நீரை பெற்று பயன்படுத்தும் வகையில் கங்கை, காவிரி நதிகளை இணைக்க வேண்டியது அவசியம்.

முதற்கட்டமாக தென் மாநிலங்களில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள நதிகளைஇணைப்பதால் இந்த மாநிலங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் காலங்களில் அந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு கடலில் வீணாககலக்கும் நீரை, வறட்சியால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு திருப்பி விட முடியும்.

எனவே முதற்கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசைவலியுறுத்துகிறேன் என்றார்.

சாப்பாடின்றி அலைக்கழிக்கப்பட்ட சோஸ்:

இந் நிலையில் கோவையில் மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸுக்கு, மாநில அரசின் சார்பில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யப்படாததால், அவரும்,அவரது செயலாளரும் நள்ளிரவில் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரவு அரசு விருந்தினர் மாளிகையில் சோஸ் தங்கினார். அமைச்சரின் இரவு சாப்பாடு குறித்து விருந்தினர் மாளிகை நிர்வாகிகளிடம் அமைச்சரின்செயலாளர் விசாரித்தபோது, சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்றுதெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டதும் அமைச்சரின் செயலாளர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அந்த நேரம் பார்த்து தாசில்தார் ராஜேந்திரன் அங்கு வந்துள்ளார்.அவரைப் பார்த்ததும் கோபமடைந்த அமைச்சரின் செயலாளர் ராஜேந்திரனை கடிந்து கொண்டார்.

மத்திய அமைச்சர் வருகிறார் என்று தெரிந்தும் சாப்பாட்டுக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்று கோபமாக கேட்டார். அதற்கு ராஜேந்திரனிடம்பதில் ஏதும் இல்லை.

விருந்தினர் மாளிகையில் சாப்பாடு இல்லை என்று தெரிய வந்ததும், அமைச்சரும், அவரது செயலாளரும்ம் நள்ளிரவு வாக்கில் வெளியில் சென்றுஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு விருந்தினர் மாளிகைக்கு வந்தனராம்.

ஜோஸுக்கு சாப்பாடு செய்து தராதது குறித்த தகவல் தலைமைச் செயலாளர் திரிபாதிக்கு சென்றது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்டஆட்சித் தலைவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+