மகன்கள் புறக்கணிப்பு: பெற்றோர் தற்கொலை
மதுரை:வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமல் மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையே கதி என இருந்ததால் மனம் உடைந்த வயதான தம்பதிதற்கொலை செய்து கொண்டனர்.
மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. 75 வயதாகும் இவரது மனைவி மணியம்மாள். இவருக்கு 65 வயதாகிறது. இருவரும்ஆசிரியர்களாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள்.
இவர்களுக்கு ராஜன், சுதாகர் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் தவிர இரு மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு கல்யாணமாகி விட்டது.திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் வசித்து வருகிறார்கள்.
ராஜன் ஆஸ்திரேலியாவிலும், சுதாகர் சிங்கப்பூரிலும் வேலை பார்த்து வருகின்றனர். மக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் இருந்ததால், பாண்டியும்,மணியம்மாளும் முத்துப்பட்டியில் தனியாக வாழ்ந்து வந்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு சுதாகர் மதுரை வந்தார். வந்த சில நாட்களிலேயே மீண்டும் சிங்கப்பூர் செல்ல விருப்பதாக தெரிவித்தார். இதனால்பாண்டியும், மணியம்மாளும் மனம் உடைந்தனர்.
எங்களுக்கு வயதாகி விட்டது. அருகே இருந்து பார்க்க வேண்டிய இரு மகன்களும் இப்படி வெளிநாடே கதி என்று கிடந்தால் எங்களது நிலை என்னஆவது என்று கூறியுள்ளனர். ஆனால் சுதாகர் அதற்கு சம்மதிக்கவில்லை.
சில வருடங்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து விட்டு திரும்பி வருவதாக அவர் கூறினாராம். இதுதொடர்பாக பெற்றோருக்கும், சுதாகருக்கும்இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
அதன் பின்னர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வரும் மனைவியிடம் போய் விட்டார் சுதாகர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாண்டியின்வீட்டிலிருந்து தீயும், புகையும் கிளம்பியுள்ளது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுத்தனர். இரு படையினரும்விரைந்து வந்தனர்.
வீட்டின் பூஜை அறையிலிருந்துதான் தீயும், புகையும் வந்ததால் அங்கு தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மணியம்மாள் பூஜை அறையில் கருகி எலும்புக் கூடான நிலையில் பிணமாக கிடந்தார். அதே அறையில்பாண்டியும் இறந்து கிடந்தார்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த சுதாகர் தனது பெற்றோர்கரிக்கட்டையாய் கிடப்பதைப் பார்த்து கதறி அழுந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications