குண்டு பாய்ந்து பாமக எம்எல்ஏ அண்ணன் பலி!
திண்டிவனம்:விழுப்புரம் அருகே நரிக்குறவர்கள் காக்கா, குருவியை பயன்படுத்தும் துப்பாக்கியை வாங்கி சுட்டுப் பார்த்தபோது வயிற்றில் குண்டு பாய்ந்துபுதுவை பாமக எம்.எல்.ஏ. அனந்தராமனின் அண்ணன் பரிதாபமாக பலியானார். இவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் உறவினர் ஆவார்.
விழுப்புரம் நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தநர் ராமச்சந்திரன். இவருக்கு ரகு, அனந்தராமன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில்அனந்தராமன் புதுவை பாமக எம்.எல்.ஏ. ஆவார்.
ரகுவுக்கு நல்லாவூர் அருகே உள்ள தலைகாணிக் குப்பத்தில் நிலம் உள்ளது. அதில் தர்பூசணி பயிரிட்டிருந்தனர். நேற்று அறுவடை நடந்தது. அதைப்பார்வையிடுவதற்காக ரகு அங்கு சென்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக சில நரிக்குறவர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர். காக்கா, குருவி உள்ளிட்ட பறவைகளை சுட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் லாவகமாக சுட்டு காக்கா, குருவியைப் பிடித்ததைப் பார்த்த ரகுவுக்கு, தானும் ஒரு முறை சுட்டுப் பார்க்க வேண்டும்என்ற ஆசை வந்தது.
இதையடுத்து குறவர்களைக் கூப்பிட்ட அவர் துப்பாக்கியை வாங்கி ஒரு பறவையை சுட முயன்றார். ஆனால், அப்போது கை தவறி துப்பாக்கிதிரும்பியதில் எதிர்பாராத விதமாக குண்டு அவரது வயிற்றிலேயே பாய்ந்து விட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை புதுச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பலியானார்.
இந் நிலையில் ரகுவை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக வதந்தி பரவி நல்லாவூர், கிளியனூர், தென்கோடிபாக்கம் உள்ளிட்ட பலகிராமங்களில் பாமகவினர் வன்முறையில் குதித்தனர்.
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் பேருந்துகள், வாகனங்களை கல்வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். தென்கோடிப்பாக்கம் கிராமத்தில்அதிமுக பிரமுகர் ஒருவரின் வீட்டையும் தாக்கி, சூறையாடினர்.
இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு வன்முறையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications