பீரோ, பூட்டு எதுக்கு? டென்ஷன் திருடன்!
சென்னை:மதுக் கடையில் திருட வந்த திருடன், இரும்பு பூரோவில் ஒரு ரூபாய் கூட இல்லாததால் கடுப்பாகி, பணமேஇல்லாத இந்தக் கடைக்கு எதற்கு இரும்பு பீரோ?, அதைப் பூட்ட ஒரு பூட்டு வேறயா? என்று கேள்விகள்கேட்டு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டர் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கியில் பணம் செலுத்தாமல், திங்கள்கிழமையன்றுதான்அந்தப் பணத்தை எடுத்து வங்கியில் செலுத்துவது ஊழியர்களின் வாடிக்கை.
வார இறுதி நாள் வருவாயை அப்படியே கடை மேஜையில் உள்ள டிராயரில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்றுவிடுவர். அதேபோல கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருமானமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைவிசேஷமாக வடிவமைக்கப்பட்டிருந்த கல்லாவில் வைத்துப் பூட்டினர். பின்னர் மேசையில் ரூ. 3,500 பணத்தைவைத்திருந்தனர்.
நேற்று காலை கடைக்கு வந்த மேற்பார்வையாளர் மகேஷ் கடையைத் திறந்தபோது கடையின் மேற் கூரைசிமென்ட் தகடுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேசை டிராயரும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ. 3500பணத்தைக் காணவில்லை.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் தடயம் ஏதேனும் உள்ளதாஎன்று சோதனை நடத்தினர். அப்போது கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் பணம்பத்திரமாக இருந்தது.
ஆனால் அதன் மேல் ஒரு கடிதம் எழுதி பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப்பார்த்த போலீஸார் திகைத்துப் போயினர். காரணம் அதை எழுதியிருந்தது திருடன்தான்.
அந்தக் கடிதத்தில், காசே இல்லாத இந்தக் கடைக்கு எதுக்கு இரும்புக் கதவு, எதுக்கு இரும்பு பீரோ, எதுக்குஇரும்புப் பூட்டு? என்று ரொம்பத் தெனாவட்டாக கேட்டிருந்தான் திருடன்!
திருட வந்ததோடு மட்டுமல்லாமல், டெக்னிக்கல் கேள்விகளையும் கேட்டு விட்டுச் சென்ற அந்த துணிகரதிருடன் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அது சரி, கல்லாப் பெட்டியைக் கூட திறக்க முடியாத திருடனுக்கு, திருட்டுத் தொழில் எதற்கு?












Click it and Unblock the Notifications