தாணு-சரண் வீடுகளில் வருமான வரி ரெய்ட்!
சென்னை:திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் டைரக்டர் சரண் வீட்டில் இன்று வருமான வரித் துறையின் சோதனை நடத்தினர்.
மிகப் பிரபலமான தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் பிரமாண்டமான படங்களைத்தயாரித்தவர்.
| சமீபத்தில் விஜய்காந்தோடு சேர்ந்து வருமான வரி ரெய்டுக்குள்ளான ஜேபிஆருடன் தாணு |
தாணு தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகியுள்ளதிருமகன், பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் சக்கரக்கட்டி ஆகியவை முக்கியமானவை.
சக்கரக்கட்டி படத்தை தாணுவின் மகன் கலா பிரபுவே இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் நல்ல அளவில் பிசினஸ் ஆகியுள்ளதாககூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தி.நகரில் உள்ள நடிகர் சங்கம் அருகே உள்ள தாணுவின் அலுவலகம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளஅவரது வீடு ஆகியவற்றில் இன்று பிற்பகல் திடீரென வருமான வரி சோதனை நடைபெற்றது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
அதே போல இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் சரண் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது.
வட்டாரம் படத்தை சமீபத்தில் தயாரித்து, இயக்கி வெளியிட்ட சரண் தற்போது முனி படத்தைத் தயாரித்து வருகிறார். ராஜ்கிரண், ராகவேந்திராலாரன்ஸ் நடித்து இயக்கும் இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், நல்ல பிசினஸ் ஆகியுள்ளதாகவும் கோடம்பாக்கம் வட்டாரத்தில்கூறப்படுகிறது.
இந் நிலையில் சரணின் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் விஜயகாந்த்தின் வீடுகள், இருப்பிடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் வைகோவுக்கு நெருக்கமான தாணு வீட்டில் ரெய்ட் நடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications