பெங்களூர்- நாய்கள் குதறி 4 வயது சிறுவன் பலி!
பெங்களூர்:பெங்களூரில், 15க்கும் மேற்பட்ட நாய்கள் சரமாரியாக கடித்துக் குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பெங்களூர் பி.இ.எம்.எல்.லே அவுட் பகுதியில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. மஞ்சுநாத் என்ற நான்கு வயது சிறுவன் தனது நண்பர்களோடுதெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது 15க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மஞ்சுநாத்தை சூழ்ந்து கொண்டு வெறித்தனமாக கடிக்கத் தொடங்கின. மஞ்சுநாத்தின் உடல்முழுவதும் அந்த வெறிநாய்கள் கடித்துக் குதறின.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மஞ்சுநாத்தை அக்கம் பக்கத்தில் உள்ளோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மஞ்சுநாத்பரிதாபமாக இறந்து போனான்.
சமீபத்தில்தான் சந்திரா லே அவுட் பகுதியில் 6 வயது சிறுமி நாய்களால் கடித்துக் குதறப்பட்டு பரிதாபமாக இறந்தாள். இந்த நிலையில் 4 வயதுசிறுவன் வெறிநாய்களின் கொடூரத்திற்குப் பலியாகியுள்ளது பெங்களூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் அலட்சியப் போக்கே இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணம் என மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர். தெரு நாய்களைப்பிடிக்கும் பணியில் மாநகராட்சி சரிவர ஈடுபடுவதில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தரப்படும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, மஞ்சுநாத்தின் மரணத்தைத் தொடர்ந்து பெங்களூர் நகரில் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள்குறித்து மாநகராட்சி நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications