இலங்கைக்கு பீடி கடத்திய 4 பேர் கைது
மண்டபம்:இலங்கைக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பீடிக் கட்டுக்களை கடத்த முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கியூ பிரிவு போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மண்டபம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில், சாக்கு மூட்டை ஒன்று வித்தியாசமாக இருந்ததைப் பார்த்து அதை நெருங்கிதிறந்து பார்த்தனர்.
அந்த சாக்குப் பையைப் பார்த்தபோது அதில் 42 பீடி பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த பீடிகளின் மதிப்புரூ. 2 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.
இந்தப் பீடி பண்டல்களை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது ராஜேந்திரன்என்பவர் சிக்கினார். இவர் தில்லைநாச்சியார் கோவில் குடியிருப்பைச் சேர்ந்தவர். பாத்திரங்களை வாடகைக்குக்கொடுக்கும் நிலையத்தை நடத்தி வருகிறார்.
இலங்கையில் பீடிக்கு நல்ல விலை கிடைப்பதால் பீடியை பதுக்கி கடத்தி விற்கவே இந்த பீடிக் கட்டுக்களை பதுக்கிவைத்திருந்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும் இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், 15 ஆண்டுகளுக்குமுன்பு தமிழகம் வந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கை அகதியானதவராஜா, முருகன், இன்னொரு முருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications