நாடாளுமன்றத்தில் கதறியழுத பாஜக எம்பி!
டெல்லி:உத்தரப் பிரதேச முலாயம் சிங் அரசு தன்னை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து சித்திரவதை செய்வதாகவும் தனக்கு மத்திய அரசு பாதுகாப்புஅளிக்காவிட்டால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுனில் மகதோ எம்பிக்கு ஏற்பட்ட கதி தான் (சுட்டுக் கொல்லப்பட்டது) தனக்கும் ஏற்படும் என்று கூறிநாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கண்ணீர் விட்டு அழுது பரபரப்பை ஏற்படுத்தினார்.
![]() |
உத்தரப் பிரதேசம் கோரக்பூர் தொகுதி எம்பியாந யோகி ஆதித்ய நாத் மீது அமைதியை குலைக்கும் விதமாக நடந்து கொண்டதாக கடந்த ஜனவரி26ம் தேதி உபி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
11 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்த யோகி நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
உத்தரப் பிரதேச போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால், எதற்காக கைது செய்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. சட்டப்படி ஒருவரை கைதுசெய்த 24 மணி நேரத்தில், அவர் மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், என்னை கைது செய்த போலீசார் 7 நாட்கள் வரை எப்ஐஆர்பதிவு செய்யவில்லை.
![]() |
என்னை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டதால், கோபமடைந்து என் மீது போலியான குற்றச்சாட்டுகளை போலீசார்அடுக்கடுக்காக பதிவு செய்தனர்.
மக்களுக்கு பாடுபட சன்னியாசம் பூண்டுவிட்டவன் நான். ஆனால், மக்களின் அமைதியை குலைக்கும் விதமாக நடந்துகொண்டேன் என்று கூறிகைது செய்யப்பட்டேன்.
மத்திய அரசு தான் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.பி. சுனில் மகதோ சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற நிலைமை தான் எனக்கும் ஏற்படும். எனக்கு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்என்றார்.
பேசும்போதே அவர் கதறி அழுதார். தனது உடையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே தான் அவர் பேசினார்.
இது குறித்து ஆராய்வதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உறுதியளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications