பால், காய்கறி இல்லாமல் வாடும் காஷ்மீருக்கு3500 கிலோ சிகரெட் ஏற்றுமதி!
ஸ்ரீநகர்:கடும் பனியால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பால், காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் வாடிக்கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குப் பதில், 3,500 கிலோ எடை கொண்ட சிகரெட் விமானம் மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் பனி காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முக்கிய நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து நடைபெறவில்லை. சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால் பால், காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்தப் பொருட்களை விநியோகிக்க மாற்றுஏற்பாடுகள் செய்யப்படாததால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து காஷ்மீருக்கு 3,500 கிலோ எடை கொண்ட சிகரெட்டுகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து வந்து சேர்ந்துள்ள இந்த சிகரெட்டுகளுக்கான சுங்க வரி செலுத்தப்படவில்லையாம். இதையடுத்து இந்த சிகரெட் மூடைகளைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இப்போது இவை வைக்கப்பட்டன.
பல்வேறு பிராண்ட் சிகரெட்டுகள் இதில் உள்ளன. பத்து கிலோ பொட்டலங்களாக இவை பேக் செய்யப்பட்டு பல்வேறு விமானங்கள் மூலம்டெல்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிகரெட் மூடைகளை வாங்க வந்த டீலரிடம், சிகரெட்டுகளுக்கான சுங்க வரி, அபராதப் பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பைசா பாக்கிஇல்லாமல் வசூலித்த பின்னரே அவரை விடுவித்தனர். அதன் பின்னர் சிகரெட் மூட்டைகளும் விடுவிக்கப்பட்டன.
காஷ்மீரில்தான் நாட்டிலேயே அதிக அளவில் புகை பிடிப்பவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இங்குதான் அதிகஅளவில் நுரையீரல், வாய், வயிற்றுப் புற்று நோய் உள்ளவர்களும் அதிகம் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications