பொதுமக்கள் பார்வைக்கு நபிகள் நாயகத்தின் புனித முடி
திருச்சிநபிகள் நாயகத்தின் 1402 ஆண்டு பழமை வாய்ந்த புனித முடி, திருச்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
நபிகள் நாயகத்தின் 1402 ஆண்டு பழமை வாய்ந்த தலைமுடி, திருச்சியில் உள்ள முகம்மதியா ஜாமியா மசூதியில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை, நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மிலாடி நபி அன்று இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன்படி மிலாடி நபி தினமான நேற்று புனித முடி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் வந்து தரிசித்தனர்.
இதுகுறித்து மசூதியின் இமாம் ஹஸ்ரத் சையத் தஸ்தகீர் கத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த புனித முடியின் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு நிழலே கிடையாது. எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் இதன் நிழல் எதிலும் விழாது என்றார்.
நபிகள் நாயகத்தின் புனித முடி, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. பெட்டியின் உள்பகுதியில் மெழுகு வைக்கப்பட்டு அதில் புனித முடியை வைத்துள்ளனர். மெழுகு அடங்கிய இந்தப் பெட்டி தண்ணீர் நிரப்பப்பட்ட கோப்பையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
முகம்மதியா ஜாமியா மசூதி 255 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications