கிட்னி மோசடியை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்
சென்னை:கிட்னி மோசடியை தடுக்க சென்னை, கோவை, மற்றும் மதுரையில் கமிஷ்னர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் சுனாமி குடியிருப்பிலிருக்கும் மீனவ பெண்களை ஏமாற்றி சிறுநீரக மோசடிகள் நடந்தது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியது.
ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரக மோசடிகள் நடந்து வருகின்றன. தண்டையார்பேட்டையை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணிடம் ரூ.1.5 லட்சம் தருவதாக கூறி சிறுநீரகத்தை எடுத்துக் ெகாண்டு ரூ.30,000 மட்டும் கொடுத்து ஏமாற்றினர்.
இதையடுத்து இந்த மோசடிகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஏராளமான புரோக்கர்கள் சிக்கினர். இவர்களிடம் போலீஸார் விசாரித்ததில் பல மருத்துவமனைகளும் மாட்டின.
சென்னை, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் போலி சான்றிதழ்கள் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது தெரிய வந்தது.
இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் பல லட்சம் ஈட்டியுள்ளனர்.
இைதயடுத்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யும் அனைத்து மருத்துவமனைகளும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த மோசடிகளை தடுக்க மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழு அமைக்க இப்போது உத்தரவிடப்பட்டுள்ளு.
முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் சிறுநீரக மோசடியை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டள்ளது.
சென்னையில் இந்த கண்காணிப்பு குழுவின் தலைவராக சென்னை போலீஸ் துணை கமிஷ்னர் ஜெய கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் தலைவர்களாக அங்குள்ள தலைமையிடத்து துணை கமிஷ்னர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,
சிறுநீரகம் செயலிழந்தவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய உறவினர்களின் சிறுநீரகம் மட்டுமே பொருத்த முடியும். உடல் உறுப்புகள் எதையும் வாங்கவோ, விற்கவோ முடியாது, தானமாகத்தான் கொடுக்க முடியும்.
ஆனால் இங்கு அறிமுகமில்லாதவர்கள் பலர் சிறுநீரக விற்றதில் புரோக்கர்கள் தான் அதிக பலனடைந்துள்ளனர்.
இப்போது அமைக்கப்பட்ட இந்த குழுவிடம் அனுமதி வாங்கித் தான் மருத்துவனைகளால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்த அங்கீகார குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து அனுமதி கொடுத்த பின்னரே அறுவை கிச்சை செய்ய முடியும்.
இந்த குழுவில் துணை கமிஷ்னர் தவிர மருத்துவ துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிக்ள் ஆகியோரும் இடம் பெறுவர். இந்த குழுவின் அனுமதியின்றி தமிழ்நாட்டில் இனி எந்த மருத்துவமனையிலும் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications