தினகரன் தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவருடன், இவர்களையும் சேர்த்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று தினகரன், சன் டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீஸார் நேற்று இரவு டைகர் பாண்டி (27), பாட்ஷா (40) ஆகியோரைக் கைது செய்தனர். இன்று அதிகாலை சரவணன் (27), பிரபு (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நான்கு பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முன்னதாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் தினகரன் நாளிதழ் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில், மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், அவரது கணவர் கோபிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, மண்டலத் தலைவர் மாணிக்கம், முன்னாள் திமுக தொண்டர் அணி செயலாளர் சரவணன், கவுன்சிலர் அருண்குமார், பொன் சேதுராமலிங்கம், சிங்கத்தேவன், அவரது மகன் ராஜா, அட்டாக் பாண்டி, பீபிகுளம் குட்டை ரவி, பெயிண்டர் முத்துராமன், மாயா உள்ளிட்டோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இதில் நான்கு பேரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலும் அழகிரி பெயர் இடம் பெறவில்லை.செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய கொலை வெறித் தாண்டவத்திற்குப் பின்னர் இன்று மதுரையில் பொதுவாக அமைதி நிலவுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications