குழந்தைகள் தவிர அனைவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
கோவை:கைக் குழந்தைகள் தவிர அனைவரும் ஹெல்மெட் அணிவதும், காரில் செல்வோர் இடுப்பு பெல்ட் அணிவதும் கட்டாயமாகிறது என தமிழக போக்குவரத்துத்துறை கமிஷ்னர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. சாலைகளி்ல் பல்வேறு விதமான வாகனங்கள் செல்கின்றன. எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோலிய பொருட்கள், ரசாயன பொருட்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கைக்குழந்தைகள் தவிர, அனைவரும் ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் மீது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பெயர், விலைப் பட்டியல் போன்றவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காரில் செல்பவர்கள் இடுப்பு பெல்ட் அணிவதும் கட்டாயமாகிறது. இந்த இடுப்பு பெல்ட் அணிவது மூலம் விபத்தில் சிக்கினாலும் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதும், காரில் செல்பவர்கள் இடுப்பு பெல்ட் அணிவதும் வரும் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும். இதில் மாற்றம் கிடையாது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் உரிமம் 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படும். மீண்டும் இந்த செயல்களில் ஈடுபட்டால் அவரது உரிமம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
வாகனங்களில் டிரைவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
16 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கியர் கொண்ட வாகனங்களை ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் 17 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை நடத்தி வருகிறது. பொதுமக்கள் இந்த பள்ளி்களின் மூலம் முறையான ஓட்டுனர் பயிற்சியை பெறலாம் என்றார் போக்குவரத்துத்துறை கமிஷ்னர் சி்ங்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்











Click it and Unblock the Notifications