இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ
சென்னை:சென்னை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார் அதிமுக எம்எல்ஏவான கணபதி. அந்த இன்ஸ்பெக்டர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
யார் பெரிய அளவில் பேராட்டம் நடத்துகிறார்களோ அவர்களுக்கே ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் பெரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பேராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கே தீ வைத்து பேராட்டம நடத்திக் காட்டியுள்ளார் வானூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கணபதி.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் திருச்சிற்றம்பலம் செல்லும் சாலையில் கணபதி தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை தனது ஆதரவாளர்களுடன் கணபதி எரிக்க முயன்றார்.
அதை பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் ஜவஹர் தடுத்தார். இதையடுத்து எம்எல்ஏவும் அவரது கையாட்களும் இன்ஸ்பெக்டர் மீதே பெட்ரோலை ஊற்றினர். அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் சுதாரிப்பதற்குள் அவருக்கு அதிமுகவினர் தீ வைத்தனர்.
இதில் ஜவஹரின் இரு கால்களும் எரிந்து போயின. உடல் முழுவதும் பயங்கர தீக் காயங்கள் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அவரை போலீசார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அந்த இன்ஸ்பெக்டரின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
இச் சம்பவத்தையடுத்து எம்எல்ஏ கணபதியும் 50 அதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர். எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது தர்புரியில் பஸ்ஸோடு சேர்த்து 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொன்றனர். இப்போது இன்ஸ்பெக்டரை கொளுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications