கொள்ளை அடித்த பணத்தில் அழகிகளைகுளிப்பாட்டிய பலே திருடர்கள் கைது
சென்னை: சென்னையில் முகமூடிக் கொள்ளையில் ஈடுபட்டு, அந்தப் பணத்தை விபச்சாரப் பெண்கள் மீது தூவி சந்தோஷித்த இரு பலே கொள்ளையர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் பல இடங்களில் இரவில் தனியாக செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு சிலர் கொள்ளை அடிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திரு.வி.க. நகர் போலீஸார் மாறுவேடத்தில் கண்காணிப்புபப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், விபச்சாரம் நடந்த ஒரு வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியபோது அங்கிருந்த பெண்களை, இரண்டு பேர் நூறு ரூபாய் நோட்டுக்களால் அபிஷேகம் செய்தது தெரிய வந்தது.
அவர்களிடம் விசாரித்த போது, சூளைமேட்டை சேர்ந்த குமரேசன்(25) மற்றும் அம்பத்தூரை சேர்ந்த ராஜா முகம்மது(25) என்பது தெரியவந்தது.
இவர்கள்தான் இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து பொதுமக்களிடம் வழிபறி செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், 5 மோட்டர் பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications