வராத கணவன்-வருந்திய மனைவிகாவல் நிலையத்தில் பஞ்சாயத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அரசியலில் 3 வது அணிக்கு எப்போதும் எதிர்காலம் கிடையாது என பாஜகவின் செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்திய தேசிய அரசியலில் 3வது அணி்ககு எப்போதும் எதிர்காலம் கிடையாது. அது வெறும் மாயை.

தேவகவுடா, வி.பி.சிங், குஜ்ரால் ஆகியோர் மிகப் பெரிய தொண்டர் பலத்தோடு 3வது அணி அமைத்தனர். காலபோக்கில் பாஜக, காங்கிரஸ கட்சிகளில் இணைந்தனர். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இப்போதைய சூழலில் 3 வது அணியை பலமுள்ளதாக அமைய அரசியல் சூழ்நிலைகள் சரியாக அமையாது. சந்திரபாபு நாயுடு உருவாக்கும் 3வது அணி்ககு தேசிய அரசியலில் முக்கியத்துவம் கிடைக்காது.

2009ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முக்கிய சக்தியாக இருக்கும். அடுத்ததாக ஆள இருக்கும் தேசிய முற்போக்கு கூட்டணியில் தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.

இடஒதுக்கீட்டு பிரச்சனை பொருத்தவரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்து எட்டப்படவேண்டும்.

அரசியல் காரணத்திற்காக முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது ஜனநாயகத்தில் குழப்பத்தையும், சிக்கலையும் உருவாக்கும். சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குதான் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.

இப்போதுள்ள மன்மோகன் சிங் அரசு மதரீதியான இடஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் இந்த இடஒதுக்கீடு இருப்பதாக கூறி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் மதரீதியான இடஒதுக்கீட்டிற்கு இடம் இல்லை. அப்படி வழங்கினால் இந்துக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் மதம் மாறக்கூடும்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக, பைரோன்சிங் செகாவத்தை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம். ஜனாதிபதி பதவிக்கு பைரோன்சிங் செகாவத் தான் பொருத்தமானவர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+