மூப்பனார் படத்திற்கு பெயிண்ட் அபிஷேகம்கொந்தளிப்பில் வாசன் ஆதரவாளர்கள்
சென்னை:சென்னை சத்தியமூர்த்தி பவனில் வரையப்பட்டிருந்த மறைந்த ஜி.கே.மூப்பனாரின் படத்தில் சிலர் பெயிண்ட்டை ஊற்றி அவமரியாதை செய்ததால் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். மற்ற தலைவர்களின் படத்தை அவர்கள் பதிலுக்கு அவமரியாதை செய்தனர். இதனால் காங்கிரஸ் தலைமைக் கழக அலுவலகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜ்யசபா தேர்தலில் ஜி.கே.வாசன் ஆதரவாளரான பி.எஸ்.ஞானதேசிகனுக்கு டிக்கெட் கிடைத்து அவர் எம்.பியும் ஆகி விட்டார். இது மற்ற கோஷ்டிகளுக்கு பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் கொடுத்துள்ளது.
எம்.பி. சீட்டுக்காக கடுமையாக முயற்சித்து வந்த மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில், சத்தியமூர்த்தி பவனில் வரையப்பட்டிருந்த மூப்பனாரின் படத்தில் சிலர் நேற்று பெயிண்ட்டை ஊற்றி அவமரியாதை செய்தனர்.
இதை அறிந்த வாசன் கோஷ்டியினர் கொந்தளித்தனர். தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலரின் படங்களை அவர்கள் பதிலுக்கு அவமரியாதை செய்தனர்.
இதனால் சத்தியமூர்த்தி பவனில் கடும் பரபரப்பு நிலவுகிறது. பெரும் ரகளை ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் போலீஸார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். பதட்டம் தணியும் வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications