கிரகாம் போர்டு புதிய கிரிக்கெட் பயி்ற்சியாளர்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கிரகாம் போர்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
![]() |
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த சேப்பல் பதவி விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத் பவார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
வங்கதேச அணியின் பயி்ற்சியாளர் வாட்மோர் இந்திய அணியின் பயிற்சியாளராவார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அவரை கேப்டன் டிராவிட் மற்றும் சீனியர் வீரர்கள் விரும்பவிலலை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து வாட்மோர் பெயரை கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கவில்லை.
இந்த நிலையில்,பயிற்சியாளர் குறித்து இந்த குழு சில நாட்களுக்கு முன்பு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கிரகாம் போர்டு, இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் எம்புரே ஆகியோரை அழைத்து பேச முடிவெடுக்கப்பட்டது.
அதனபடி நேற்று இரவு சென்னையில் தேர்வுக் குழு கூடி பயிற்சியாளர் குறித்து தீவிரமாக ஆலோசித்து கிரகாம் போர்டு மற்றும் எம்புரே ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
அதன் இறுதியில் போர்டு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இத்தகவலை கிரிக்கெட் வாரிய பொருளாளர் சீனிவாசன் அறிவித்தார். ஒரு வருடத்திற்கு போர்டு நியமிக்கப்பட்டு்ள்ளார்.













Click it and Unblock the Notifications