அழகிரி கை ஓங்குகிறது-திமுகவினர் கொண்டாட்டம்!!
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தக் கட்சியினரை விட திமுகவினர்தான் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![]() |
மதுரை நகர் முழுவதும் திமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றிக்கு தங்களது அண்ணன் மு.க.அழகிரிதான் காரணம் என திமுகவினர் பெருமையாகக் கூறியபடி அவரது வீட்டிலும் குவிந்து வருகின்றனர்.
![]() |
இதேபோல, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் சரமாரியாக பட்டாசுகள் வெடித்து திமுகவினர், காங்கிரஸின் வெற்றியைக் கொண்டாடினர்.
மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது, 3 பேர் படுகொலை செய்யப்பட்டது, மதுரை நகரில் நடந்த பெரும் கலவரம் ஆகிய சம்பவங்களுக்குப் பின்னால் திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்பட்ட நிலையில் நடந்த இந்த இடைதேர்தலில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, அதிலும் அதிமுகவிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றியிருப்பது திமுக தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அழகிரியின் கரமும் வலுப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன், இந்த வெற்றி மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்றார்.














Click it and Unblock the Notifications