தேர்தல் வழக்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெ. மனு
சென்னை:
4 தொகுதி வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா, ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்கு எதிராக திமுக எம்பி குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ஒருவர் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் ஜெயலலிதா உரிய தகவல்கள் அளிக்காமல் 4 தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டபடி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் பழனிவேலு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 6 வார காலத்திற்குள் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக் தேர்தல் ஆணையம் அளித்த விளக்க மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஏற்கனவே தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications