நெட் ஸ்லோ - கம்ப்யூட்டரை தூக்கி ஜன்னல்வழியே வீசிய ஜெர்மன் வாலிபர்
பெர்லின்:இன்டர்நெட் இணைப்பு படு மந்த வேகத்தில் இருந்ததால் கடுப்பான ஜெர்மன் நாட்டு வாலிபர் ஜன்னல் வழியாக கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைத்தார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்தவர் ஜான். இவர் ஒரு இன்டர்நெட் பைத்தியம். எப்போதும் நெட்டிலியே நீச்சலடித்தபடி இருப்பாராம்.
வீட்டுக்கு வந்தபிறகும் கூட பாதி நேரம் கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பது வழக்கமாம். இரவு வெகு நேரம் இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்வது ஜானின் வழக்கம்.
சம்பவத்தன்றும் ஜான் பிரவுசிங்கில் உட்கார்ந்தார். அவரது நேரமோ என்னவோ, இன்டர்நெட் இணைப்பு படு மந்தமாக இருந்தது. இ-மெயில் இன் பாக்ஸ் திறப்பதற்கே நெடு நேரம் பிடித்ததாம்.
பொறுத்துப் பார்த்த ஜான் பொறுமை இழந்தார். இதென்ன கட்டை வண்டி கனெக்ஷன் என்று கோபமாக கூறியபடி ஜன்னல் வழியாக தனது கம்ப்யூட்டரைத் தூக்கி எறிந்தார்.
பலத்த சப்தத்துடன் கீழே வந்து விழுந்த கம்ப்யூட்டர் உடைந்து சிதறியது. அது நள்ளிரவு நேரம் என்பதால், இந்த சத்தத்தைத் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீவிரவாத தாக்குதலோ என்று பயந்து போய் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போதுதான் கம்ப்யூட்டர் ஒன்று உடைந்து சிதறிக் கிடந்ததைப் பார்த்தனர். போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் என்னவென்று விசாரித்தபோது, ஜான் தானாக முன்வந்து, இது எனது கம்ப்யூட்டர்தான். நெட் படு ஸ்லோவாக இருந்தது. அதனால்தான் தூக்கிப் போட்டு உடைத்து விட்டேன், நத்திங் டு ஒர்ரி என்று கூறி அத்தனை பேரிடமும் ஸாரியும் சொன்னாராம்.
இதையடுத்து இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதீர்கள். நெட் ஸ்லோவாக இருந்தால் உரிய இடத்தில் புகார் செய்யுங்கள் என்று ஜானுக்கு அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினார்களாம் போலீஸ்காரர்கள்.
நம்ம ஊரில் நெட் ஸ்லோ என்று கோபப்பட்டு கம்ப்யூட்டரை ஜன்னல் வழியே வீச ஆரம்பித்தால் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் கம்ப்யூட்டர்களை வீசுவது?












Click it and Unblock the Notifications