டெல்லி, உத்தராஞ்சலில் அதிகாலையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:டெல்லி மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவானது.
இன்று காலை 4.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை டெல்லி, உத்தரகாசி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் உணர முடிந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
தஜிக்கில் நிலநடுக்கம்- 12 பேர் பலி
இதற்கிடையே தஜிக்கிஸ்தானிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் நிலச் சரிவுகள் ஏற்பட்டதில் அதில் சிக்கி 12 பேர் வரை பலியாயினர். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications