சோட்டா ஷகீலின் கூட்டாளி பெங்களூரில் கைது
பெங்களூரு:வந்த தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டான்.
மும்பையின் அண்டர் வேர்ல்டு தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி ராஜேஷ் ராம். இவன் மீது போலீஸாரால் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்து வரும் இவனை பல ஆண்டுகளாக போலீஸார் தேடி வந்தனர்.
இந் நிலையில் பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராஜேஷ் வரப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராஜேஷை மடக்க திட்டம் தீட்டினர்.
அதன்படி பெங்களூர் வந்திறங்கிய ராஜேஷ் ராமை மும்பை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இது குறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில்,
தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்களை மிரட்டி பணம் பறிப்பது தான் இவன் தொழில். அவனை பல ஆண்டுகளாக தேடி வந்தோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி பெங்களூரில் வைத்து அமுக்கி விட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications