பல பெண்களை பலாத்காரம் செய்த ஷேர் ஆட்டோ டிரைவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் கத்தி முனையில் மிரட்டி பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவன் ராஜேஷ் (20). சிறுவயதிலிருந்தே ஊதாரியாக சுற்றித் திரிந்துள்ளான். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு திருட்டு குற்றத்துக்காக கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

கடந்த வருடம் தான் விடுதலை ஆனான். வெளியே வந்த பின் ஷேர் ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தான். ஆனாலும் தனது திருட்டு தொழிலை விடவில்லை.

திருடுவது மட்டுமல்லாமல் தனது ஷேர் ஆட்டோவில் தனியாக யாராவது பெண் மாட்டினால் அவரை கத்தியைக் காட்டி மிரட்டி கற்பழிக்கும் வேலையையும் செய்துள்ளான். மானத்துக்கு பயந்து யாரும் இதை வெளியில் சொல்லாததால் இவன் மாட்டவில்லை.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராஜமங்கலம் பகுதி 200 அடி சாலையில் இருட்டில் ராஜேஷ் தனியாக தனது ஷேர் ஆட்டோவில் நின்றிருந்தான்.

ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் ஷேர் ஆட்டோ நிற்பதைப் பார்த்து சந்தேகமடைந்தார் அங்கு இரவு ரோந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் ராஜாவும், சந்திரஹாசனும்.

இருட்டில் தனியாக நிற்கும் ராஜேஷை பார்த்து சந்தேகம் அடைந்து அவனை விசாரித்தனர்.

வண்டி ஸ்டார்ட்டிங் ட்ரபிள் என்று கதை விட்டவனை நம்பாத இன்ஸ்பெக்டர் சந்திரஹாசன் அவனிடம் ஆட்டோ சாவியை வாங்கி ஸ்டார்ட் செய்துள்ளார். வண்டி பிரச்சனையே இல்லாமல் ஆன் ஆனது.

இதையடுத்து அவனிடம் தீவிரமாக போலீசார் விசாரிக்கவே, கொரட்டூரில் ஆட்டோவில் சவாரி வந்த பெண்ணை கடத்தி சென்று மிரட்டி கற்பழித்துவிட்டு வருவதாகக் கூறி அதிர்ச்சி தந்தான்.

இதையடுத்து அவனை ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த இன்ஸ்பெக்டர்கள் புரட்டி எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவன் சொன்ன தகவல்கள் போலீசாரையே அதிர வைத்தது.

சென்னை அண்ணாநகர், அடையார், தரமணி உட்பட பல இடங்களிலும் தான் செய்த கற்பழிப்புக்களை பற்றி விலாவாரியாக போலீசாரிடம் கொட்டினான் ராஜேஷ்.

அவன் சொன்னபடி பார்த்தால் 20க்கும் மேற்பட்ட பெண்களை ராஜேஷ் மிரட்டி கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது.

இரவு நேரத்தில் ஆட்டோவில் தனியாக யாராவது ஏறினால் உள் பக்கமாகப் பூட்டிவிட்டு அதற்கு பிறகு யாரையும் சவாரி ஏற்றாமல் இருட்டான பகுதிக்கு ஆட்டோவை கொண்டு சென்று கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்துள்ளான்.

தன் மிரட்டலுக்கு படியாத பெண்களை அடித்து உதைத்துள்ளான். காம இச்சையை தீர்த்துக் கொண்டு பெண்களிடம் நகை, பணத்தை பறித்துக் கொண்டு விரட்டியடித்து வந்துள்ளான்.

கிட்டத்தட்ட கடந்த 1 வருடமாக இந்தச் செயலை செய்து வந்துள்ளான். அடையாறு பகுதியில் தான் அதிகபட்ச கற்பழிப்புகளை செய்துள்ளான்.

ஆனால், தான் வசிக்கும் புழல் பகுதியில் அவன் இந்தச் செயலில் ஈடுபடுவதில்லையாம்.

ராஜேஷால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் புகார் கொடுக்கவில்லை. சிலர் மட்டும்தான் புகார் கொடுத்துள்ளனர். அதுவும் கற்பழிப்பு புகார் இல்லை, ஷேர் ஆட்டோ டிரைவர் கடத்தி சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்தார் என்று மட்டுமே புகார்கள் வந்துள்ளன.

இவனது புகைப்படத்தை சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

அவன் கொடுத்த வாக்குமூலத்தில், நான் மட்டுமா இந்தச் செயலை செய்துள்ளேன். என்னை மாதிரி நிறைய ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இந்த செயலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய கெட்ட நேரம் நான் போலீசில் பிடிபட்டுவிட்டேன் என்று கூறி அதிர்ச்சியைத் தந்துள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+